Advertisment

கிடுகிடுவென சுகர் ஏறுதா? உங்க லஞ்ச் இப்படி இருக்கட்டும்!

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருக்கும்போது ஒவ்வொரு உணவிற்கும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் இருக்கா? இந்த 4 விதைகளில் தினமும் ஏதாவது ஓன்றை சாப்பிடுங்க!

உலகளவில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டர் நீரிழிவு நோய். உடல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம்.

Advertisment

உணவு கட்டுப்பாடு மற்றும் சில இயற்கை மூலிககைகள் மூலம் உடல் சர்க்கரையின் அளவை கட்டக்குள் வைக்கலாம். நங்கள் உணவுப் பிரியராக இருந்து  அதே நேரத்தில் நீரிழிவு நோயுடன் போராடுபவராக இருந்தால், எளிமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சரியான தேர்வுகள் மூலம், நீரிழிவு நோயை நிர்வகிப்பது எளிமையாக இருக்கும்.

அதே சமயம் நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருக்கும்போது ஒவ்வொரு உணவிற்கும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்., தினசரி மதிய உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால், உங்களுக்கு தேவையான உணவு பட்டியலை இதில் இருந்து தேர்வு செய்துகொள்ளுங்கள்

ரொட்டி வகைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு, அரிசியை விட ரொட்டியைத் தேர்ந்தெடுப்பது நல்லது, ஏனெனில் ரொட்டியை விட அரிசி அதிக இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும். நீங்கள் சாதம் இல்லாத உணவை பிடிக்காதவராக இருந்தால், உங்கள் சாதத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. சாதத்தை குயினோவாவுடன் மாற்றுவது உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உற்ற துணையாக இருக்கது சப்பாத்தி. ஜோவர் ரொட்டி, ஓட்ஸ் ரொட்டி, ராகி ரொட்டி, பஜ்ரா ரொட்டி, மூங் தால் ரொட்டி மற்றும் பச்சை பட்டாணி ரொட்டி இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பொறுத்தமான உணவு.

பருப்பு வகைகள்

நீரிழிவு நோயாளிகள் தங்களின் தினசரி புரதத் தேவைக்கு பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். புரோட்டீன் அன்றாட உணவில் அவசியமான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்றாலும், உங்கள் புரத உட்கொள்ளல் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான புரதம் உங்கள் சிறுநீரகங்களை ஓவர்லோட் செய்யும். நீங்கள் மதிய உணவில் சாப்பிடக்கூடிய சில நீரிழிவு நோய்க்கு ஏற்ற பருப்பு வகைகள்- சனா தால், உளுத்தம் பருப்பு, மூங்தால், மசூர் தால், பாலக் தால், ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை.

சப்ஜி வகைகள்

சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கிழங்கு தவிர அனைத்து வகையான காய்கறிகளையும் சாப்பிடலாம், ஏனெனில் அவற்றில் அதிக மாவுச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் அன்றாட உணவில் சேர்க்கப்படும் குறைந்த கிளைசெமிக் மற்றும் உகந்த காய்கறிகளில் பிண்டி, பாகற்காய், துவரம்பருப்பு, பிரிஞ்சி, பாலக், பீன்ஸ், ப்ரோக்கோலி, மேத்தி, காளான், குடைமிளகாய், பட்டாணி, கேரட், கீரை, காலிஃபிளவர். , சுரைக்காய் போன்றவை.

சாலட் வகைகள்

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள சாலட்டை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. உங்கள் மதிய உணவுடன் சில நார்ச்சத்துள்ள சாலட்கள் உங்கள் உணவை சமநிலைப்படுத்த உதவும், இது இரத்தத்தில் சர்க்கரை அளவுஅதிகரிப்பை தடுக்கலாம். நீங்கள் அடிப்படை வெங்காயம்-தக்காளி-வெள்ளரிக்காய் சாலட், முட்டைக்கோஸ்-கேரட் சாலட், கச்சம்பர் சாலட், கீரை சாலட் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்த சாலட்டையும் சாப்பிடலாம், ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் எடுத்தக்கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Diabetes Heather Nauert
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment