Advertisment

சர்க்கரை, இதய நோயாளிகள் இந்த எண்ணெய்யை மட்டும் பயன்படுத்தவே கூடாது.. ஏன் தெரியுமா ?

சமீப காலங்களில் இதய நோய் பாதிப்பு அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்நிலையில் ரத்த குழாய்களில் கொழுப்பு படிதல், ரத்த குழாய்கள் சுருங்குவது என்று பல விதமான பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்க்கரை, இதய நோயாளிகள் இந்த எண்ணெய்யை மட்டும் பயன்படுத்தவே கூடாது.. ஏன் தெரியுமா ?

சமீப காலங்களில் இதய நோய் பாதிப்பு அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்நிலையில் ரத்த குழாய்களில் கொழுப்பு படிதல், ரத்த குழாய்கள் சுருங்குவது என்று பல விதமான பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இதயத்தின் நன்மைக்கு எந்த எண்ணெய் சிறந்தது, என்ற கேள்வி நமக்கு எழுதுவது இயல்பான ஒன்று. மேலும் எண்ணெய் இல்லாமலே சாப்பிடுவதுதான் சிறந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது தேவையான சில சத்துக்களை எண்ணெய் தருகிறது.

தாவரங்களை அடிப்படையாக கொண்ட மோனோ சாச்சுரேட்டட் கொழு சத்து கொண்ட எண்ணெய் சிறந்தது.  நீங்கள் ஒருவேளை பாலிசாச்சுரேடட் கொழுப்பு சத்தை பயன்படுத்தினால், அதில் ஒமேகா -3 பேட்டி ஆசிட் இருக்கிறதா என்பதை பார்க்கொள்ள வேண்டும்.

விலங்குகளிடத்திலிருந்து எடுக்கப்பட்ட டிரான்ஸ் மற்றும் சாச்சுரேடட் கொழுப்பு சத்துக்களான வெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆலிவ் ஆயில் சரிவருமா ?

அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய வெண்ணை, மயோனேஸ் போன்றவைக்களுக்கு பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்தப்பட்டபோது இதய பாதிப்பு குறைவாக காணப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பொறித்த உணவுகளை சமைக்கும்போது ஆலிவ் ஆயில் சரிவராது. இதை அதிகமாக சூடாக்கும்போது நச்சுதன்மையாக மாறிவிடும்.

இதனால் பொறிப்பதற்கு தேங்காய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவது நல்லதல்லது. சர்க்கரை அளவு அதிகரிக்க கூடும். பாதாம் எண்ணெய், அவகடோ எண்ணெய் ஆகியவை இவர்களுக்கு நல்லது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment