வயிறு உப்பசத்தை தீர்க்கும் தனியா சாதம் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை 2 கொத்து
மிளகு – அரை டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
முந்திரி – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
வடித்த சாதம் 2 கப்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
செய்முறை:
முதலில் தனியா (கொத்தமல்லி) தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
வறுப்பட்டு வாசனை வந்தவுடன் அதனுடன், கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில், எண்ணெய் சேர்த்து, காய்ந்தவுடன், கடுகு சீரகம், நிலக்கடலை, முந்திரி, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து, அதில் 2 கப் சாதம் சேர்த்து கிளறவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தனியா தூளை சாதத்தில் சேர்த்து கிளறி தேவையாள அளவு உப்பு சேர்த்து, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான தனியா சாதம் ரெடி. குழந்தைகளுக்கு பசியை தூண்டும் இந்த சாதத்தை ஸ்கூல் செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.