Advertisment

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு கிளாஸ்... ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க இதைப் பண்ணுங்க!

வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே இந்த நிலைமைகளுக்கு தீர்வு காணலாம் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாக இருக்கிறது.

author-image
WebDesk
Dec 10, 2022 19:06 IST
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு கிளாஸ்... ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க இதைப் பண்ணுங்க!

விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் மனிதனின் வாழ்க்கை முறையும் மாற்றமடைந்து வருவது பொதுவான ஒன்றாகிவிட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் நீரிழிவு உள்ளிட்ட வாழ்நாள் பிரச்சனைகளுடன் போராடி வருகின்றனர். வயதானவர்கள் மட்டுமல்லாமல் தற்போது இளைஞர்கள் மத்தியிலும் இதுபோன்ற பிரச்சினைகள் பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன.

Advertisment

ஆனால் இந்த நிலைமைகளை சமாளிக்க சரியாக நிர்வகிக்க சரியாக ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அதேபோல் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே இந்த நிலைமைகளுக்கு தீர்வு காணலாம் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாக இருக்கிறது.

பல்வேறு ஆய்வுகளின்படி, பெரும்பாலான இந்திய உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் சீரக விதைகள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சீரகம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாகவும் அறியப்படுகிறது. சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் துண்டுவதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

publive-image

இது தொடர்பான 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 50 மற்றும் 100 மி.கி அளவு பச்சை சீரகம் அத்தியாவசிய எண்ணெயின் கிளைசெமிக் மற்றும் அழற்சி குறியீடுகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரகம் சிமினம் சப்ளிமெண்ட்எவ்வாறு குறையும் என்பது நிறுவப்பட்டது. இன்சுலின் அளவு, இரத்த சர்க்கரை மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் ஆகியவற்றிற்கு சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, டைப் 2 நீரிழிவு நோயின் சிக்கல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், சீரகம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோய்க்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும்.

சீரக விதைகளை முழு விதை வடிவில் அல்லது தூள் வடிவில் எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வறுத்த சீரக தூள் பருப்பு, தயிர் அல்லது சாலட்டில் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்க சேர்க்கப்படுகிறது. உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கிளாஸ் சீரக தண்ணீரைக் குடிப்பது இரத்த குளுக்கோஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

மருத்துவம் மற்றும் முழுமையான ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து தி கிரேட் இந்தியன் டயட்டின் இணை ஆசிரியரான லூக் கவுடின்ஹோ கூறிய கருத்துக்களின்படி, நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொண்டிருந்தால், சீரக விதைகளை உட்கொள்வதைக் கண்காணிப்பது அவசியம்.

ஏனென்றால், சீரகத்தை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மிகக் குறைத்து, இரத்தச் சர்க்கரைக் குறைவு எனப்படும், மருத்துவ அவசரநிலைக்கு வழிவகுக்கும். அதே சமயம் சீரகத்தின் கலப்பட வடிவத்தை உட்கொள்ளாமல், கரிம கருஞ்சீரக விதைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். தவிர, சீரகம் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் மன அழுத்தம் போன்ற நிலைகளும் சீரகத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எதிர்த்துப் போராடலாம்.

இருப்பினும், இந்த நன்மைகள் குறித்து அதிக ஆராய்ச்சி தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக மனிதர்களில். சிறந்த சப்ளிமெண்ட் வடிவம் மற்றும் டோஸ் தற்போது அறியப்படவில்லை, எனவே, இது ஒரு துணைப் பொருளாக இல்லாமல் உணவில் சிறந்ததாக இருக்கும் என்பதை கவனதித்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Pat Cummins #Diabetes #Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment