Advertisment

உஷார்... இந்தப் பிரச்னை உள்ளவங்க இளநீர் பக்கம் போகாதீங்க': நிபுணர்கள் எச்சரிக்கை

இளநீர் பாதுகாப்பானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் உடலை ஹைட்ரேட் செய்வதற்கான சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், அதன் அதிகப்படியான நுகர்வு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உஷார்... இந்தப் பிரச்னை உள்ளவங்க இளநீர் பக்கம் போகாதீங்க': நிபுணர்கள் எச்சரிக்கை

இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு பெரிய நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் இளநீர் பற்றி நம் அனைவரும் அறிந்த ஒன்று. கோடைகாலத்தில் அதிகமாக எடுத்தக்கொள்ளும் பானங்களில் இளநீருக்கு முக்கிய இடம் உண்டு. உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முதல் தெளிவான, முகப்பரு இல்லாத சருமத்தை அடைய உதவுகிறது.

Advertisment

இதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்த நம்மில் பலர் இதை தினமும் (சில நேரங்களில், ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட!) குடித்து வருகிறோம், இருப்பினும், பெரும்பாலான உணவுப் பொருட்களைப் போலவே, இளநீரை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இளநீர் பாதுகாப்பானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் உடலை ஹைட்ரேட் செய்வதற்கான சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், அதன் அதிகப்படியான நுகர்வு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்" என்று ஊட்டச்சத்து நிபுணர் அமன் பூரி கூறியுள்ளார்.

இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதை அதிகமாக குடிப்பதால், சிறுநீரக பிரச்சனை மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்தும் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மை ஏற்படலாம்.

சிறுநீரக பிரச்சனைகள்

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் சுகாதார நிபுணரை அணுகவேண்டும் என்று பூரி பரிந்துரைத்தார். "சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், சிறுநீரின் மூலம் பொட்டாசியம் வெளியேற்றம் பாதிக்கப்படும். இது ஹைபர்கேமியாவுக்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

"உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இளநீர் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் இது அதிக சோடியம் உள்ளடக்கம் காரணமாக இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம்" என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரித்திகா பேடி, ஹெல்த்சேக் நிறுவனர் கூறியுள்ளார். "அதன் உயர் பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்" என்றும் கூறியுள்ளார்.

சர்க்கரை அதிகம்

இளநீரை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது என்று பிரித்திகா பேடி கூறியுள்ளார். “மக்கள் மற்ற பழச்சாறுகளுக்கு பதிலாக இளநீரை குடிக்கிறார்கள், ஏனெனில் அதில் சர்க்கரை குறைவாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இளநீர் ஒரு கப் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. இதன் விளைவாக, நீரிழிவு நோயாளிகள் தேங்காய் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை தினமும் குடிப்பது ஆபத்தானது. பெரும்பாலான விளையாட்டு பானங்கள் மற்றும் பழச்சாறுகளை விட இளநீரில் குறைவான சர்க்கரை உள்ளது என்றாலும், அதில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன.

மலமிளக்கியாக செயல்படலாம்

இளநீர் ஒரு இயற்கை மலமிளக்கியாகும், எனவே, அதிகமாக குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்கள் அதிக இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

இது குறித்து அமன் பூரி கூறுகையில் “அதிகப்படியான நுகர்வு சிலருக்கு வயிற்று வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம். இளநீருக்கு டையூரிடிக் தன்மையும் உள்ளது. எனவே, அதை அதிகமாக குடிப்பது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, அடிக்கடி கழிவறைக்குச் செல்வதற்கு வழிவகுக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு நல்லதல்ல

பிரித்திகா பேடி, பரிந்துரைப்படி, ஒருவர் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு இளநீர் குடிப்பதற்கு பதிலாக வழக்கமான தண்ணீரை உட்கொள்ள வேண்டும். “வொர்க்அவுட்டிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது எப்போதும் சிறந்தது, ஏனெனில் அதில் நிறைய உப்பு உள்ளது, இது செயல்பாட்டின் போது உடல் சக்தியை இழக்கிறது. தாகம் காரணமாக நீங்கள் இரண்டு கிளாஸ் இளநீர் குடிப்பீர்கள், இது உங்கள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும், ”என்று அவர் கூறினார், “தினமும் குடிப்பதை விட வாரத்திற்கு ஒரு முறை இளநீரை விருந்தாக” குடிப்பது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment