Advertisment

ஹலோ சுகர் பேஷன்ட்ஸ்... அரிசி, உருளைக் கிழங்கு இப்படி சாப்பிடுங்க!

சமைத்த உணவை குளிர்விப்பதனால் நோய்களை எதிர்க்கும் மாவுச்சத்தின் வளமான ஆதாரமாக மாற்றுகிறது.

author-image
WebDesk
New Update
ஹலோ சுகர் பேஷன்ட்ஸ்... அரிசி, உருளைக் கிழங்கு இப்படி சாப்பிடுங்க!

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சாதம் மற்றும் உருளைக்கிழங்கு பெரிய வில்லன் என்று சொல்லாம். ஏனென்றால், இந்த இரண்டு உணவுப் பொருட்களிலும் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.

Advertisment

லைஃப்ஸ்டைல் ​​பயிற்சியாளர் லூக் குடின்ஹோவின் கூறியது படி, சாதம் மற்றும் உருளைக்கிழங்கை "சரியான முறையில் சமைத்து உட்கொண்டால் அவை நன்மை தரும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், “எந்தவொரு குடல் பிரச்சினையையும் கையாள்வதில் அணுகுமுறை மிகவும் பெரியது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறிந்து உணவு பொருட்களை எடுத்தக்கொள்வது நல்லது.

எனவே, உங்கள் இரத்த சர்க்கரை, குடல் மற்றும் உடல் எடை ஆகியவற்றிற்கு சாதம் மற்றும் உருளைக்கிழங்கை ஆரோக்கியமாக மாற்ற அவற்றை சமைத்து 8-12 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் குளிர்வித்து சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால், சமைத்த உணவை குளிர்விப்பதனால் நோய்களை எதிர்க்கும் மாவுச்சத்தின் வளமான ஆதாரமாக மாற்றுகிறது. "குளிர்ச்சியானது உருளைக்கிழங்கு மற்றும் சாதம் போன்ற உணவுகளின் இரசாயன அமைப்பை மாற்றி ஜீரணிக்கும் நேரத்தை மாற்றியமைக்கிறது. இது செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதால் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது,"

மாவுச்சத்து எதிர்ப்பு பண்புகள் :

சிறுகுடலில் மாவுச்சத்து சர்க்கரையாக உடைவதை ‘எதிர்த்து’ பெரிய குடலுக்குச் செல்கிறது.

குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை (SCFA) உற்பத்தி செய்ய நல்ல குடல் பாக்டீரியாவை நொதித்து உணவளிக்கிறது. என்று நிபுணர் குடின்ஹோ கூறியுள்ளார்.

குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை மேலும் ப்யூட்ரேட்டாக உடைகின்றன, இது குடல் ஒருமைப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நல்ல குடல் ஆரோக்கியத்தை உருவாக்குகிறது.

எதிர்ப்பு மாவுச்சத்து நன்மைகள்

 குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது.

மனநிறைவை ஊக்குவிக்கிறது.

எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடும்போது உணவுக்குப் பின் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் தாக்கத்தை குறைக்கிறது.

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது.

தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.

கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

"இது நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.

ஏட்னாவின் விஹெல்த் (vHealth) மூத்த உணவியல் நிபுணர் டாக்டர் விதி திங்ரா இது தொடர்பாக கூறுகையில் “நீரிழிவு நோய் வரும்போது, ​​மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு மற்றும் சாதத்தை நாம் பெரும்பாலும் தவிர்க்கிறோம். ஆனால், இந்த உணவுகளை நாம் மிதமாகச் சேர்த்து, சமைத்த பிறகு குளிர்விக்கும் விதியை முயற்சித்தால், அது கிளைசெமிக் குறியீட்டைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும், எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.

சாதம் 8-10 மணி நேரம் சமைத்து குளிர்விப்பது உண்மையில் நன்மை தரும். புதிதாக சமைத்த சாதத்தை விட குளிர்ந்த சாதத்தில் இரண்டு மடங்கு எதிர்ப்பு சக்தி உள்ளது. எதிர்ப்பு ஸ்டார்ச் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது, அதாவது மலச்சிக்கலின் அளவைக் குறைக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அதிகரிப்பு.

இன்சுலினுக்கு பதிலளிக்கும் உடலின் திறனை மேம்படுத்துகிறது. இதன் பொருள் இன்சுலின் எதிர்ப்பின் குறைந்த ஆபத்து மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களுடன் தொடர்புடையது" என்று ஐத்ரைவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் முக்தா பிரதான் கூறியுள்ளார்.

உருளைக்கிழங்குக்கும் இதே நிலைதான் என்றாலும், உருளைக்கிழங்கிலும் ஆன்டிநியூட்ரியன்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதான், "தினமும் உட்கொள்ளும் உருளைக்கிழங்கின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று" என்று கூறியுள்ளார்.

மேலும் உருளைக்கிழங்கு மற்றும் சாதத்தை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான மற்றொரு வழி, காலையில் சாதம் செய்வதை விட இரவல் சமைத்து குளிர்வித்து காலையில் சாப்பிடலாம். ஏனெனில் இந்த முறை "மற்ற வடிவங்களுடன் ஒப்பிடும்போது சர்க்கரையின் மிகக் குறைந்த உயர்வை ஏற்படுத்துகிறது", என்று திங்ரா கூறினார்.

எதிர்க்கும் மாவுச்சத்தின் வேறு சில ஆதாரங்கள்

சமைத்த மற்றும் ஆறிய உருளைக்கிழங்கு

சமைத்த மற்றும் ஆறிய சாதம்

சமைத்த மற்றும் ஆறிய ஓட்ஸ்

பச்சை வாழைப்பழங்கள்

பருப்பு வகைகள்

சமைத்த மற்றும் குளிர்ந்த பாஸ்தா (முழு தானியம் சிறந்தது)

மாவுச்சத்துள்ள காய்கறிகள் - உருளைக்கிழங்கு, கிழங்கு, சோளம்

தமிழ் இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment