scorecardresearch

பெண்கள் இந்த உணவை மிஸ் செய்யாதீங்க; உளுந்து குழம்பு சிம்பிள் செய்முறை!

இது மிகவும் சத்தானது, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்து குழம்பு எப்படி செய்றதுனு பாருங்க!

Tamil Recipe
Ulunthu kuzhambu Recipe

சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அதில் ஆண், பெண் இரு பாலருக்கும் மிகவும் உதவியாக இருப்பது யூடியூப் தான்.

அதில் My Country Foods யூடியூப் சேனல் இணையத்தில் மிகவும் பிரபலம். லாக்டவுன் போது அவர்கள் பகிர்ந்த கருப்பு உளுந்து குழம்பு அப்போது மிகவும் வைரலானது.  இது மிகவும் சத்தானது, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்து குழம்பு எப்படி செய்றதுனு பாருங்க!

தேவையான பொருட்கள்

தேங்காய்

சின்ன வெங்காயம், பூண்டு

கறுப்பு உளுந்து (கழுவி காயவைத்தது)

புளி- நெல்லிக்காய் அளவு

தக்காளி

நல்லெண்ணெய்

கடுகு, வெந்தயம்

செய்முறை

முதலில் தேங்காயை துருவிக் கொள்ளவும், சின்ன வெங்காயம், பூண்டு எடுத்து தோலை நீக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் கருப்பு உளுந்து சேர்ந்து நன்கு வறுக்கவும். பிறகு, உளுந்தை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதே கடாயில், சோம்பு, சீரகம் வறுத்து, அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி, அதை தனியாக வைக்கவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்க்கவும். அது, பொரிந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளி, சிறிது கல் உப்பு  சேர்த்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளி நன்கு வதங்கியதும், அதில் தேவையான அளவு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இதில் கொஞ்சமாக வறுத்த உளுந்தை சேர்க்கவும்.

இப்போது வறுத்த தேங்காய், சோம்பு, சீரகம், உளுந்து அனைத்தையும் மிக்ஸியில், கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணியாக கொரகொரப்பாக அரைக்கவும். குழம்பு நன்றாக கொதித்ததும் அந்த பேஸ்டை குழம்பில் சேர்க்கவும்.

உளுந்து சேர்த்ததால் அடிபிடிக்கும். எனவே அடிக்கடி கிளறி விடவும். தீயை மிதமாக வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து வரும் வரை காத்திருக்கவும்.

இப்போது காய்கறியே இல்லாத சுவையான கறுப்பு உளுந்து குழம்பு ரெடி. இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, பூரி என அனைத்துக்கும் பர்ஃபெக்ட் சைட்-டிஷாக இருக்கும்.

குறிப்பாக மாதவிடாய் நேரத்தில், இந்த உளுந்து குழம்பு சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Tamil recipe ulundhu kuzhambu recipe my country foods youtube channel