Advertisment

இந்த 4 விஷயம் தெரிஞ்சா போதும்... சந்தையில் சுவையான மாம்பழம் தேர்வு செய்வது ரொம்ப ஈஸி!

கோடைகாலங்களில் மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மாம்பழங்களின் வருகை தான்.

author-image
Janani Nagarajan
New Update
இந்த 4 விஷயம் தெரிஞ்சா போதும்... சந்தையில் சுவையான மாம்பழம் தேர்வு செய்வது ரொம்ப ஈஸி!

கோடைக்காலங்களை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மாம்பழங்களின் வருகை தான். இதனாலேயே வெயில்காலத்தை மாம்பழம் சீசன் என்று கூறுவது வழக்கம். 

Advertisment

அல்போன்சா, சௌசா, தோதாபுரி, தாஷேரி போன்ற பல்வேறு மாம்பழ வகைகள் கிடைப்பதால், மாம்பழம் 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. அதன் இனிமையான நறுமணமும், இனிப்பான சுவையும் கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. 

அப்படி பட்ட சுவையான மாம்பழங்களை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது? அதை பற்றி கீழே வரும் கட்டுரையில் பார்ப்போம்:

பழுத்த மற்றும் இனிப்பு மாம்பழங்களை எப்படி வாங்கலாம்?

பழுத்த மற்றும் இனிப்பான மாம்பழங்களைப் வாங்குவதற்கான எளிதான வழி, பாரம்பரிய வழியில் செல்வதுதான். மாம்பழத்தை எடுத்து உங்கள் கைகளால் உணருங்கள். பழுத்த மாம்பழம் மென்மையாக இருக்கும், அதே சமயம் பழுக்காத மாம்பழம் உறுதியான தோலுடன் இருக்கும்.

நீங்கள் மாம்பழத்தை மெதுவாக அழுத்தலாம் ஆனால் அதிக அளவு அழுத்த வேண்டாம், அப்படி செய்தால் மாம்பழத்தின் தன்மை சிதைந்துபோகும். எல்லாப் பக்கங்களிலும் மெதுவாகப் பரிசோதித்து மென்மையான மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

பழத்தின் வாசனை வைத்து சிறந்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்க முடியுமா?

மாம்பழத்தின் பழுத்த தன்மையை சரிபார்க்க மற்றொரு எளிதான வழி வாசனை சோதனை செய்வது தான். முழுமையாக பழுத்த மாம்பழம் எப்போதும் தண்டுக்கு அருகில் வலுவான மற்றும் இனிமையான வாசனையுடன் இருக்கும், அதே சமயம் பழுக்காத மாம்பழத்தில்  வாசனை இருக்காது. முலாம்பழம் மற்றும் அன்னாசிப்பழம் வாங்கும் போதும் இவ்வழியை உபயோகிக்கலாம்.

பழத்தின் வண்ணத்தை வைத்து எப்படி தேர்வு செய்வது?

பெரும்பாலான மக்கள் மாம்பழங்களை வாங்கும் போது வண்ண சோதனையை தேர்வு செய்கிறார்கள். இது மாம்பழத்தின் முதிர்ச்சியை சரிபார்க்கும் உண்மையான வழி அல்ல. மாம்பழ வகைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களைக் கொண்டுள்ளன, மேலும் மாம்பழம் பழுத்ததா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள எந்த குறிப்பிட்ட முறையும் இல்லை.

ஊறவைக்க மறந்துவிடாதீர்கள்:

மாம்பழங்களை சாப்பிடும் முன் ஊறவைக்கும் பழமையான நடைமுறையானது தெர்மோஜெனீசிஸ் செயல்முறை ஆகும். இதன் மூலம் மாம்பழங்களில் இருந்து வெப்பத்தை அகற்ற உதவுகிறது. மாம்பழத்தை ஊறவைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை லூஸ் மோஷன் போன்றவற்றை உண்டாக்கும்.

மாம்பழங்களை எப்படி சேமிப்பது

பழுத்த மாம்பழங்களை சேமிப்பதற்கும், பழுக்க வைக்கும் செயல்முறையை மெதுவாக்குவதற்கும் சிறந்த வழி, குளிர்சாதன பெட்டியில் வைப்பதாகும். பழுத்த மாம்பழங்களை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 4-5 நாட்களுக்கு வைத்தால் புதியதாக இருக்கும்.

இன்னும் கொஞ்சம் பழுக்காத மாம்பழங்களை நீங்கள் வாங்கியிருந்தால், அவற்றை ஒரு காகித பையில் அல்லது செய்தித்தாளில் போர்த்தி, அறை வெப்பநிலையில் சேமிக்கவும். இது அவற்றின் பழுக்க வைக்கும் செயல்முறையை கட்டுப்படுத்தும், அதன்பின் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

இந்த கோடைகாலத்தில் மாம்பழ டிஷ்:

மாம்பழத்தை பலவகையில் நாம் உண்ணலாம், நீங்கள் அதை அனைத்து வகையான சமையல் வகைகளையும் செய்ய பயன்படுத்தலாம். மாம்பழ ஸ்மூத்தி, மாம்பழ சட்னி, மாம்பழ பராத்தா, மாம்பழ சாட், மாம்பழக்கூழ், மாம்பழ கேக், மாம்பழ பர்ஃபி, மாம்பழ லாஞ்சி, மாம்பழக் கஸ்டர்ட், மாம்பழக் கறி, மாம்பழ பச்சடி, மாம்பழ புட்டு போன்றவை இந்த கோடையில் நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய சில சமையல் குறிப்புகளாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Summer Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment