scorecardresearch

உஷார்… உணவு முறையில் இந்த 3 முக்கியம்: மறந்தால் சுகர் எகிறும்!

பல முயற்சிகள் செய்தாலும் அதில் பெரிதும் பலன் இருக்காது. உணவு பழக்கத்தை மாற்றியபோதும் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் நாம் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு சில விஷயங்கள் காரணமாக அமைகிறது.

உஷார்… உணவு முறையில் இந்த 3 முக்கியம்: மறந்தால் சுகர் எகிறும்!

நாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்தாலும் அதில் பெரிதும் பலன் இருக்காது. உணவு பழக்கத்தை மாற்றியபோதும் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் நாம் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கு சில விஷயங்கள் காரணமாக அமைகிறது.

கார்போஹைட்ரேட்  உணவுகளுடன், சரியான அளவில் புரத சத்து, நார்சத்து ஆகியவற்றை எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை நாம் சாப்பிடும்போது நமது ரத்தத்தில் நேரடியாக சக்கரை கலந்துவிடுகிறது. ஆனால் இத்துடன் புரத சத்து மற்றும் நார்சத்து உணவுகளை சேர்த்து சாப்பிட்டால். இந்த சத்துக்கள் ரத்தத்தில் சக்கரை நேரடியாக கலக்கும் வேகத்தை குறைக்கிறது.

வழக்கத்தைவிட குறைந்த அளவில் நார்சத்தை எடுத்துகொண்டால் இதுவும் சக்கரை அளவை அதிகரிக்கிறது. ஒரு வளர்ந்த ஆண் தினமும் 30 முதல் 38 கிராம் வரை நார்சத்து எடுத்துகொள்ள வேண்டும். ஒரு வளர்ந்த பெண் 21 முதல் 25 கிராம் வரை எடுத்துகொள்ள வேண்டும். இது சக்கரை அளவை குறைப்பதோடு, உணவை ஜீரணிக்கவும்  உதவுகிறது.

நமக்கே தெரியாமல் நமது உணவில் இருக்கும் சர்க்கரை

நாம் சாப்பிடும், சில உணவுகளில் சக்கரை இருப்பதே நமக்கு தெரிவதில்லை. பழங்கள், சீரியல்ஸ், பழச் சாறு, பிரட், குறைந்த கொழுப்பு உள்ள தயிர். இப்படி பல உணவுகளில் சக்கரை மறைந்திருக்கிறது. இதுபோன்ற உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகமாகிவிடுகிறது.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: These habits leads to spike the sugar level