Advertisment

சீரற்ற ஹார்மோன் அளவுகள்: இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் 

நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரான அளவில் இருந்தால்தான், நமக்கு நோய் பாதிப்பு ஏற்படாது. இந்நிலையில் உணவில் தேவையான சத்துகளை நாம் சேர்த்துக்கொண்டால், சீரற்ற ஹார்மோன் அளவு ஏற்படாது.

author-image
WebDesk
New Update
சீரற்ற ஹார்மோன் அளவுகள்: இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் 

நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரான அளவில் இருந்தால்தான், நமக்கு நோய் பாதிப்பு ஏற்படாது. இந்நிலையில் உணவில் தேவையான சத்துகளை நாம் சேர்த்துக்கொண்டால், சீரற்ற ஹார்மோன் அளவு ஏற்படாது.

Advertisment

முட்டைக்கோஸில் உள்ள சத்துக்கள் நமது ஹார்மோன்களை சீராக வைத்துகொள்ள உதவுகிறது. இதை நாம் அவித்து பொறியல் செய்தும் சாப்பிடலாம்.

தக்காளியில் உள்ள முக்கிய சத்துக்கள், நமது உடலை முக்கியமான நோய் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றும். மேலும் நாம் சாலட் மற்றும் சமைத்து தக்காளியை சாப்பிடும்போது சீரான ஹார்மோன் அளவுகளை நாம் தக்க வைத்துகொள்ள முடியும்.

அவக்கடோ தினமும் ஒன்றை சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் நன்றாக குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் தலை முடி, சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

இதுபோல பீட்ரூட் மற்றும் கீரையிலும், ஹார்மோன்களை சீராக வைத்திருக்கும் ஆற்றல் உள்ளது. பீட்ரூட் சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகரிக்கும். மேலும் , கீரை மற்றும் பீட்ரூட்டில்  நார்சத்து அதிகம். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment