Advertisment

சுகர், கொலஸ்ட்ரால் இருக்கா? நீங்க மிஸ் பண்ணவே கூடாத காய்கறி இதுதான்!

சர்க்கரை நோய், எடை குறைப்புக்கு உதவும் சூப்பரான காய்கறி; கோடை காலத்திலும் இதன் நன்மை அதிகம்; முழுமையான விவரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர், கொலஸ்ட்ரால் இருக்கா? நீங்க மிஸ் பண்ணவே கூடாத காய்கறி இதுதான்!

Bhagyashree shares the ‘perfect veggie for weightwatchers, reducing cholesterol, regulating blood sugar’: கோடை காலத்தில் நாம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை சொல்லத் தேவையில்லை. குறைந்தபட்சம் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது கட்டாயம் என்றாலும், கோடை கால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது முக்கியமானது. கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகளில் ஒன்று சுரைக்காய். இது ஒரு தண்ணீர்சத்து நிறைந்துள்ள காய்கறி.

Advertisment

நடிகை பாக்யஸ்ரீ தசானி தனது இன்ஸ்டாகிராமில், கோடைகாலத்தில் சுரைக்காய் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “கோடை தொடங்கும் நிலையில், நாம் அனைவரும் தண்ணீர் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும். சுரைக்காய் போன்ற நீர் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்வது உண்மையில் நன்மை பயக்கும். அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான காய்கறிகள் எனது வீட்டில் வளர்க்கப்படுகின்றன. எளிதில் ஜீரணிக்கக்கூடிய, எடை குறைக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஏற்ற காய்கறி சுரைக்காய். இது ஒரு குளிரூட்டியாகவும் செயல்படுகிறது மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது, ஏனெனில் இது இயற்கையில் காரத்தன்மை கொண்டது," என்று தனது #TuesdayTip தொடரின் ஒரு பகுதியாக கூறினார்.

சுரைக்காயை நீங்கள் சூப், சாம்பார், சாலடுகள் மற்றும் கிரேவிகளாக செய்துப் பயன்படுத்தலாம் என்றும் பாக்யஸ்ரீ கூறினார்.

சுரைக்காயின் நன்மைகள்

92 சதவீதம் தண்ணீர் மற்றும் எட்டு சதவீதம் நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. CSIR-Indian Institute of Chemical Technology (IICT) ஆராய்ச்சியாளர்கள் 2012-13 இல் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, பொதுவாகக் கிடைக்கும் 13 காய்கறிகளின் சாறுகள், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் வளர்ச்சியுடன் தொடர்புடைய நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டது. முள்ளங்கிக்கு அடுத்தப்படியாக, நொதியின் செயல்பாட்டைக் குறைக்க அல்லது தடுக்க சுரைக்காய் உதவுகிறது. இதில் உள்ள புரோட்டீன்-டைரோசின் பாஸ்பேடேஸ் 1 பீட்டா இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பதிலும், இன்சுலின் உணர்திறனைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

புதிதாகப் பிழிந்த சுரைக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்றாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இந்த டெக்னிக் இவ்ளோ நாள் தெரியலையே… கோதுமை, அரிசி மாவில் வண்டு விழாமல் இருக்க இதை பண்ணுங்க!

இதில் ஒரு வகையான நரம்பியக்கடத்தியான கோலின் என்ற வேதிப்பொருள் நல்ல அளவில் உள்ளது. இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியின் பின்னர் சுரைக்காய் சாற்றைக் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான இயற்கையான குளுக்கோஸை நிரப்பலாம்.

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment