உடல் எடை குறைக்க வேண்டும் என்று பல முறை நினைத்திருப்போம். குறுகிய காலத்தில் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். இதனால் சாப்பிடாமல் இருப்பது. மேலும் குறைவாக சாப்பிடுவோம். இந்நிலையில் நிபுணர்களின் கூற்று படி சாப்பிடாமல் இருப்பதும், குறைவாக சாப்பிடுவதும் பலனளிக்காது. கூடுதலாக இப்படி செய்வதால் மெட்டபாலிசம் , ஆதாவது உடலின் இயக்கமானது மெதுவாக செயல்படும்..
நாம் சாப்பிடும் உணவு சக்தியாக மாற்றுவதற்கு ஆனபாலிசம் மற்றும் கேட்டபாலிசம் (catabolism and anabolism) நடைபெற வேண்டும். இதற்கான சிக்னலை நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் உடலுக்கு கொடுக்கிறது.
இதனால் குறைவாக உணவு எடுத்துகொள்ளும்போது, உடல் முதலில் நன்றாக இயங்கும். ஆனால் இது தொடர்ந்தால், உடல் உற்பத்தி செய்யும் சூடு குறையும். இதனால் மிகவும் குறைவாக சாப்பிடுகிறவர்கள் உடல் ஜில்லென்று இருக்கும். எனவே இதனால் எந்த பயனும் இல்லை.

இந்தியர்கள் குறிப்பாக கார்போஹைட்ரேட் குறைத்துக்கொண்டாலே போதுமானது. முளைகட்டிய பயிர்கள், நட்ஸ், ஓட்ஸ், இட்லி, பருப்பு சாம்பார், முட்டை, முழு தானியம் , சிறு தானியம், சாப்பாத்தி, கைகுத்தல் அரிசி ஆகிய உணவுகளை நாம் சாப்பிடலாம்.
மேலும் நாம் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, பீச் பழங்கள், கொய்யா, அத்திப்பழம், ஸ்டாபரி, அன்னாசிப் பழம், பேரிச்சம்பழம், பப்பாளி ஆகியவற்றை நாம் அளவோடு சாப்பிடலாம்.