உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த வெல்ல டீயை குடியுங்க. வெல்லத்தில் இயற்கையான இனிப்பு மட்டுமே இருக்கிறது. இதனால் கூடுதல் எடை அதிகரிக்காது. இதுவரை நடைபெற்ற ஆய்வில் பால் கலந்த டீ, இனிப்பு சேர்ந்த டீயைவிட இந்த டீ சிறந்தது என்று கூறப்படுகிறது.
இது உடல் இயக்கத்தை அதிகரித்து, உடல் எடை குறைய உதவும். ஜீரணத்திற்கு வெல்லம் உதவுகிறது. வெல்லம் உணவை அதிகமாக ஜீரணிக்க உதவுகிறது. இந்நிலையில் உடலில் தேங்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
நமது உடல் இயக்கம் சரியாக இருந்தால், உணவை நமது உடல் சக்தியாக மாற்றும். உடல் இயக்கம் சரியாக இருந்தால் சரியான உடல் எடையில் இருப்போம். வெல்லத்தில் பொட்டாஷியம் உள்ளது. இவை எலக்ட்ரோலைட் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. சதைகளை உருவாக்க உதவுகிறது. நமது உடல் இயக்கம் நன்றாக இருந்தால் அதிக கலோரிகளை நாம் செலவு செய்ய முடியும்.
இந்நிலையில் இது ரத்த சோகை நோய்யை குணமாக்கும். இதனால் ரத்த சோகை நோய் ஏற்படாது. வெல்லத்தில் வைட்டமின் ஏ, பி, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் உள்ளது.
தேவையான பொருட்கள்
2 கப் தண்ணீர்
2 முதல் 3 டேபிள் ஸ்பூன் வெல்லம்
1 டீஸ்பூன் டீ இலைகள்
துருவிய இஞ்சி
2-3 ஏலக்காய்
1 பட்டை
மிளகு பொடி ஒரு சிட்டிகை
செய்முறை: தண்ணீரில் இஞ்சி, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் மிளகு பொடியை சேர்க்கவும். தொடர்ந்து டீ இலைகள் மற்றும் வெல்லத்தை சேர்க்கவும். தொடர்ந்து கொதிக்க வைக்கவும். தற்போது வடிகட்ட வேண்டும்.
இந்த டீயை குடித்து நாளை தொடங்கலாம். இல்லையென்றால் மதியம் சாபிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“