Advertisment

சுகர் பேஷன்ட்ஸ் எவ்ளோ பால் சாப்பிடலாம்? மாற்று உணவு என்ன?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் பால் சேர்த்து கொள்வது குறித்தும், எவ்வளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பேஷன்ட்ஸ் எவ்ளோ பால் சாப்பிடலாம்? மாற்று உணவு என்ன?

சர்க்கரை நோயால் பலரும் பாதிக்கப்பட்டு மருந்து உண்டு வருகிறார்கள். உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மரபு வழியாகவும் அதாவது தந்தை, தாயிற்கு சர்க்கரை நோய் இருக்கும் போது மரபு வழியாகவும் அவர்களது மகன், மகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படலாம். மருத்துவர்களின் அறிவுறுத்தலில்படி உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

Advertisment

இந்நிலையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் பால் சேர்த்துக் கொள்ளலாமா? எவ்வளவு அளவு எடுத்துக் கொள்ளலாம் என்பது நிபுணர்கள் விளக்குகின்றனர்.

உங்கள் உணவில் பால் முக்கியமானது. அதில் ஊட்டச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

One cup of whole-fat milk has: கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலில்

152 கலோரிகள்

7 கிராம் fat

12 கிராம் கார்போஹைட்ரேட்

One cup of reduced-fat milk has: குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பாலில்

122 கலோரிகள்

4.5 கிராம் fat

12 கிராம் கார்போஹைட்ரேட்

One cup of low-fat milk has:

106 கலோரிகள்

2.5 fat‌

12 கிராம் கார்போஹைட்ரேட்

One cup of fat-free milk has: ஒரு கப் கொழுப்பு இல்லாத பாலில்

84 கலோரிகள்

1 கிராம் குறைவாக fat

12 கிராம் கார்போஹைட்ரேட்

நீரிழிவு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த அபாயத்தைக் குறைக்கலாம். நல்ல கொழுப்புள்ள உணவுகள் உட்கொள்ளும்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

பாலில் உள்ள கொழுப்பு பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாக உள்ளது. அதனால் low-fat or fat-free milk எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கொழுப்பை தவிர்த்து, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

பாலுக்கு மாற்று உணவு

பசும்பால் பிடிக்கவில்லை என்றால் மாற்று உணவாக சில உணவுகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை

பாதம்

முந்திரி

தேங்காய்

ஆட்டு பால்

ஹேசல்நட்

ஓட்ஸ்

பட்டாணி

வேர்க்கடலை

அரிசி

சோயா

எதிலும் சர்க்கரை சேர்க்கப்படாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த வரை சர்க்கரை சேர்க்கப்படாத பாலை தேர்வு செய்து பருகுங்கள். பால் சேர்க்கப்படாததால், கால்சியம் மற்றும் புரதத்தை வேறு உணவுகளில் சேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment