கோதுமை பிரட் வைத்து மசாலா, வெங்காயம் போட்டி செய்யும் பிரட் உப்புமா இப்படி சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை பிரட்
தக்காளி
வெங்காயம்
மிளகாய் தூள்
பச்சை மிளகாய்
காயம்
இஞ்சி
மஞ்சள் தூள்
கரம் மசாலா பொடி
செய்முறை :
கோதுமை பிரட்டை பிச்சு போட வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அதில் இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மாசலா பொடி சேர்த்து வதக்கம் . தொடர்ந்து தக்காளி சேர்க்கவும். மேலும் பிரட்டையும் சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். சூப்பரான பிரட் உப்புமா ரெடி .