கோதுமை தோசை சாப்பிட சிலருக்கு விருப்பம் இருக்காது, அதற்கு காரணம் தோசை சுட்டால் வழவழ என்று இருக்கு. ஆனால், அந்த கோதுமை தோசையிஏ கிரிஸ்பியாக இருந்தால் ரொம்ப பிடிக்கும். அதற்காக கோதுமை தோசையை கிரிஸ்பியாக சுட முயற்சிக்கும்போது, அது பெரும்பாலும் தீய்ந்து கருகிப் போய்விடுகிறது. அதனால், கோதுமை தோசை செய்ய முடியாமல், கிரிஸ்பியான கோதுமை தோசை சாப்பிட விரும்புபவர்கள், 2 ஸ்பூன் ரவை சேர்த்து கோதுமை தோசை செய்தால் சூப்பராக இருக்கும்.
கிரிஸ்பியான கோதுமை தோசை செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். அதற்கு 2 ஸ்பூன் ரவை முக்கியம், இந்த டிப்சை நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க.
கிரிஸ்பி கோதுமை தோசை செய்முறை
பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் 2 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் 1/4 கால் கப் அளவு ரவை சேர்த்துக்கொள்ளுங்கள். 1 வெங்காயம், 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். 1 கொத்து கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது 2 கப் தண்ணீர் உற்றி கலக்கி விடுங்கள் தேவையான தண்ணீர் உற்றி கலக்கிக் கொள்ளுங்கள். ரொம்ப தண்ணீராக இருப்பதாக நினைத்தால், கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது, ஸ்டவ்வை பற்ற வைத்து அதில் தோசை தவாவை வையுங்கள். அதில் எண்ணெய் தடவுங்கள். இப்போது கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை எடுத்து, தோசை ஊற்றுங்கள். மேலேயும் லேசாக எண்ணெய் ஊற்றுங்கள்.
ஓரங்களில் அடிபிடிக்காமல் கரண்டியில் எடுத்து விடுங்கள், வெந்த பிறகு, தோசையைத் திருப்பி போடுங்கள். வெந்ததும் எடுத்து வையுங்கள். அவ்வளவுதான் கிரிஸ்பியான கோதுமை தோசை தயார். இதற்கு கெட்டி சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள், செம டேஸ்ட்டாக இருக்கும்.