தொடர் சோர்வு ஏற்பட்டால் வாழைப்பழம் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சோர்வு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் பேசியிருப்பதாவது: ”அதீத உடல் உழைப்பு செலுத்தினால் நமக்கு சோர்வு ஏற்படலாம். தேவையான அளவு சத்து எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். இந்நிலையில் இந்த சோர்வுக்கு காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். இரும்புசத்துக் குறைவால் சோர்வு ஏற்படும். தமிழகத்தில் 55 % குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஒன்று இரும்பு சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை. அல்லது சாப்பிடும் இரும்பு சத்தை உடல் ஏற்றுக்கொள்வில்லை என்று அர்த்தம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவதால், ரத்த சோகை ஏற்படலாம். அல்லது வைட்டமின் டி அல்லது பி12 குறைவாக இருந்தாலும் சோர்வு ஏற்படலாம். நம் வீட்டு பிள்ளைகள், புரத சத்து, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். எண்ணெய்யே வேண்டாம் என்றும் கூறமுடியாது. வைட்டமின் ஏ சத்தை உடல் எடுத்துக்கொள்ள எண்ணெய் வேண்டும்.
எல்லா சத்துக்களை சரிபாதி எடுத்துக்கொள்ள வேண்டும். டென்னிஸ் விளையாட்டை விளையாடும் வீரர்கள், இடைவேளையில் வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு ஜூலை எடுத்துக்கொள்வார்கள். வாழைப்பழம் உடனடியாக ஒரு உற்சாகம் மற்றும் சக்தியை கொடுக்கிறது. உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு இருந்தாலும் வாழைப்பழம் சாப்பிடலாம். பழங்களில் சிறிய கனிமங்கள் இருக்கிறது. மேலும் மாதுளை பழத்தில் மனதை மகிழ்விக்கும் ஹார்மோனை சுரக்கும் தன்மை கொண்டது என்று ஆய்வுகள் சொல்கிறது. சோர்வைப் போக்குவதற்கான முதல் தேர்வு பழங்களாக இருக்க வேண்டும். அடிக்கடி சோர்வாக இருந்தால், வேறு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறியே உடல் சோர்வுதான். புற்றுநோய்களுக்கு கூட சோர்வு ஒரு அறிகுறியாக இருக்கலாம். பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பறிறு வகைகள், கொண்டைக்கடலை, ராஜ்மா, ஆகியவையில் அதிக புரத சத்து இருக்கிறது. இது சோர்வை போக்கும். கால்சியம் குறைவாக இருந்தால் மோர் , கேல்வரகு எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டை துவயல் எடுத்துக்கொள்ள வேண்டும். பி12 சத்து குறைபாடு இருந்தால், ஆட்டு மண்ணீரல், வெள்ளாட்டு மண்ணீரல் எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் மோர் மற்றும் சரியான அளவில் பால் எடுத்துக்கொள்ளலாம். “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“