Advertisment

சுகர் இருக்கா? காலை உணவுடன் 2 ஸ்பூன் சீயா விதை... இவ்ளோ நன்மையா?

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக சியா விதைகள் கருதப்படுகிறது. இதில் நார்சத்து, கால்சியம், ஒமேக -3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இதை சாப்பிடுவதால் ,ரத்த சர்க்கரை குறையும். மேலும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் இருக்கா? காலை உணவுடன் 2 ஸ்பூன் சீயா விதை... இவ்ளோ நன்மையா?

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக சியா விதைகள் கருதப்படுகிறது. இதில் நார்சத்து, கால்சியம், ஒமேக -3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இதை சாப்பிடுவதால் ,ரத்த சர்க்கரை  குறையும். மேலும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். மேலும் கொலஸ்டராலுக்கு இது சிறந்த மருந்தாகிறது. மேற்கு உலக நாடுகளில் இதை ஒரு அறியவகை உணவு என்று குறிப்பிடுகிறார்கள்.

Advertisment

100 கிராம் சியா விதைகள் வெறும் ரூ.90 கிடைக்கிறது. பாலில் இருப்பதைவிட கால்சியம் இதில் 6 மடங்கு இருக்கிறது. ஒமேக 3 பேட்டி ஆசிட் இருப்பதால் இதயம் மற்றும் மூளைக்கு நன்மை தருகிறது.

இது குடலுக்கு நன்மை தருகிறது.  ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் ஒரு நாளுக்கு தேவையான 12 சதவிகித நார்சத்து இருக்கிறது. இது குடலில் நல்ல பேக்டீரியாவை உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு 15 கிராம் மேலாக சியா விதை சாப்பிடக்கூடாது. இதற்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

சியா விதைகளை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. சியா விதைகளை 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து, காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். சூப், கஞ்சி, சீரியல்யுடன் சேர்த்து சாப்பிடலாம். சியா புரொட்டின் வகைகளும் இப்போது பரவலாகி வருகிறது. கேக், பிரட் போன்ற பேக்கரி உணவு வகைகளில் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment