Advertisment

Rasi Palan 26th February 2021: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th February 2021: உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan 26th february, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, february horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், பிப்ரவரி 26, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope,

Rasi Palan February 26th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 26th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 26ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :  தேடல்கள் இல்லாமல் எதுவும் இல்லை. உங்களின் தேடலே உங்களது வெற்றியை உறுதி செய்யும். வெற்றியை பகிர்ந்து கொண்டாடுங்கள். வீட்டிலேயே இருப்பது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், இதில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் விலைமதிப்பற்றது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :  தடுமாற்றம் இயற்கை தானே. அதை கேஷுவலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆராயக் கூடாது. நேர்மறை சிந்தனைகள் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பெற்றோர்களின் ஆசி பெறுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :  சிந்தனை உங்களின் தரம் உயர்த்தும். திட்டம் போட்டு பகுப்பாய்வு செய்து நீங்கள் வினையாற்றும் செயல் வெற்றியை வசப்படுத்தும். சிரிப்பின் மூலம் மற்றவர்களை கவரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஏறுமுகமே.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : மனைவியின் அன்பைப் பெறுவீர்கள். இடர்பாடுகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். பயமிருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதிப்பீர்கள். எங்கு சென்றாலும் உச்சமாய் இருக்க வேண்டும் என்று எண்ணும் கடக ராசி நேயர்களுக்கு வெற்றி மகள் காத்திருக்கிறாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  உங்களுக்கான நாள் இது. விடை தெரியாமல் இருந்த பல தருணங்கள் மீது இன்று வெளிச்சம் பாயவிருக்கிறது. அது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும், காத்திருக்க சொல்லிவிட்டு உங்களுக்கான தருணங்களை அனுபவியுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :  தள்ளிபோய்க் கொண்டிருந்த திருமண அம்சம் விரைவில் கைக்கூடும். கவலை வேண்டாம். உங்களுக்கு திருமண திசை இப்போது இருக்கிறது. அதேபோல், காதலும் கைக்கூடும். துணிந்து காதல் சொல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :  பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Horoscope Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment