Rasi Palan 18th November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 18th November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2020:
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) :
ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20): உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் பார்வை இருப்பதால் , வாழ்வின் அநேக சிக்கல்கள் விலகும். கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சரியான முறையை கற்றுக்கொள்ள வேண்டும். சீரான மனநிலை மிக முக்கியம்!
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : உங்கள் சுற்றி நடக்கும் விசயங்களை விவாதிக்கத் தொடங்குங்கள். உறவினர்களின் வலி அறிந்து செயல்படுங்கள். புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் என்னும் அந்தப் பழமொழி உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல்; மாற்றத்திற்கும், எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்றுக்கொள்தற்கும் தயாராக இருங்கள். மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை . சேமித்து வைத்த பணங்களை செலவு செய்ய தயங்காதீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : அடுத்த 48 மணிநேரங்களில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் உங்கள் எதிர்காலத்தை வழிநடத்தும்/ தீர்மானிக்கும் வல்லமை பெற்றது. தொடக்கத்தில் ஏமாற்றம் அளித்த பல விஷயங்கள் முன்னேற்றம் அடையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : முக்கிய விவகாரங்களிலிருந்து விலகி செல்வீர்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க விரும்புவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : மற்றவர்களின் ஆதரவை பெற கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். கிரகங்கள் சாதகமான இடத்தில் உள்ளதால், எண்ணிய காரியங்கள் ஈடேறும். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்.பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்..
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : நிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகள் மேற்கொள்வீர்கள். சட்ட விவிகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய ஐடியாக்களை அமல்படுத்துவீர்கள். தலைமை ஏற்று சில நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிறப்பான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். இலக்கை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையும். விரயத்தை தவிர்ப்பீர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): சிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.