Rasi Palan 31st December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 31st December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 31, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : குறுகிய மனப்பான்மை மற்றும் வெறுப்பை நீக்கி, பிறரின் வாழ்க்கையில் தன்னலமற்ற சேவையை செய்ய முன்வர வேண்டும். நீண்டகால திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை எடுப்பதற்கான நல்ல தருணம் .
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): உடல் நலத்துடன் இருக்கமுடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களில் இருந்து முழுதும் விடுபட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கங்கள் ஆகியவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் .
மிதுனம் (மே 22 – ஜூன் 21): நீங்கள் சமீபத்தில் அனைத்து சரியான நகர்வுகளையும் செய்துள்ளீர்கள். நடந்து முடிந்த நிகழ்வுகள் பற்றி பொருட்படுத்த தேவையில்லை. தெளிவான பார்வை உங்களை வழிநடத்தும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : கடுமையான முடிவுகளை எடுத்தாக வேண்டிய எந்தவித கட்டாயமும் உங்களுக்கு இல்லை. தயவுசெய்து எதிலும் அவசரப் படவேண்டாம். நீங்கள் முழுமையானவர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். உண்மைகள் வெகுத் தொலைவில் இல்லை. மன உறுதியுடன் இருப்பது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : இலாபகரமான நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாய்ப்பு தேடிவரும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு செயல்களை செய்து முடிப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): பல தடைகளுக்குப் பின் சில நல்ல விஷயங்கள் உங்கள் மனதை குளிர்விக்க காத்திருக்கிறது. பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையில் தடுமாறினாலும் காப்பாற்றப்படுவீர்கள். திருமண தோஷம் விலகும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். ஆதரவு அதிகரிக்கும். தீவிரமான எதிர்ப்புகளையும் சாதாரணமாக கடந்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். அதேசமயம், முடிவு திருப்தியாக இருக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : பணியில் சில இறுக்கமான சூழ்நிலை நிலவும். திறமையுடன் , விவேகமாக செயல்பட்டால் வெற்றியை வசப்படுத்தலாம். குடும்ப விஷயங்களில் நிலவிய குழப்பம் அகலும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிக்கலான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்ப உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும்.