Rasi Palan 10th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 10, 2018: இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல.

Rasi Palan Today 10th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.

Rasi Palan 10th November 2018 : இன்றைய ராசி பலன், 10 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வெற்றிகரமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிப் பெறும். இரும்பு தொடர்பான பிரிவில் பணியாற்றுவோர்களுக்கு உயர்பதவி தேடி வர வாய்ப்புள்ளது. வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சாப்பாடு அளவைக் குரைத்துக் கொள்வது நல்லது. உடல்நலம் சார்ந்த தொந்தரவுகள் உண்டாகலாம். மனைவியிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் அன்பை கொடுத்தால் பிழைப்பு ஓட்டலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

திரைத் துறையில் உள்ளவர்களின் எண்ணங்கள் ஈடேறும் நாள் இன்று. உங்களது இடது பக்க மூளை சிறப்பாக வேலை செயும். கலை படைப்புகள் அருவியாக கொட்டும். குடும்ப உறவில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று எண்ண வேண்டாம்.  மற்றவர்களை விட உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் எண்ண வேண்டாம். இரண்டுமே உங்களுக்கு இன்று ஆபத்து. தோல்வியை கொடுத்துவிடும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பட்டப்படிப்பு வெற்றிகரமாக நிறைவடையும். வேலை செய்யும் இடத்தில் நிலவில மன அழுத்தம் விலகும், தென்றல் காற்று வீசுவது போன்று உணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று ஸ்திரமான. இலக்குகளை வெல்லக்கூடிய இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் ஊக்கத்தொகை வகையில் பணம் பெறுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கோபத்தைக் குறைத்துக் கொள்வது உங்களுக்கும் நல்லது, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். சுய சிந்தனையுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மருத்துவர்களிடம் செல்லும் நிலை ஏற்படும். எதிர்காற்றில் பயணம் செய்வதை முடிந்தளவு தவிருங்கள். மனைவியிடம் அன்பு காட்டுங்கள். பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Horoscope news in Tamil.

×Close
×Close