Advertisment

Rasi Palan 11th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 11th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rasi palan march 11 2020 rasi palan today

rasi palan march 11 2020 rasi palan today

Today Rasi Palan, 11th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 11th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 11, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கடினமான நேரங்களை நீச்சலடித்து கடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். ஏறக்குறைய கிளைமேக்ஸ் வந்துவிட்டீர். ஆனால், சில தடங்கல்கள் இன்னும் உங்களை சங்கடப்படுத்தும். தாமதமான முடிவுகள் உங்கள் வேதனைப்படுத்தும். இன்னும் சில நாட்களுக்கு இவை விலகாது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

போர் வீரனாக உங்களை நினைத்துக் கொள்வதெல்லாம் சரி. பயிற்சி எங்கே? பயிற்சி இல்லாமல் களத்திற்கு சென்றால் மீள முடியுமா? இதை யோசிக்க வேண்டாமா? கடன் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

ஆதரவான நிமிடங்களை இழந்துவிடாதீர்கள். அவை உங்களுக்காக காத்திருக்கின்றன. தேடி வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டால், அதன் வலி பின்னாளில் அதிகம் ஊடுருவும். வெளிநாடு செல்லும் புதிய வாய்ப்புகள் அமையும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த இங்கு எவரும் இல்லை. உங்கள் முயற்சிக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டே இருங்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி அடையும். கடந்த கால கசப்புகள் மறைந்து, உங்கள் தூற்றியவர்கள் உங்களை போற்றுவார்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த தருணங்கள் உருமாறும். எதையும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், களமிறங்கி செயல்படத் தொடங்குங்கள். பண விவகாரத்தில் மேலோட்டமாக இருக்க வேண்டாம். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களே நீங்களே மிகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். சில தருணங்களில் நீங்களே பிரச்சனையை மோசமாக்கி விளைவை அனுபவிப்பீர்கள். பதட்டமான சூழ்நிலையில், 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு அப்படியே அமருங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தடைகளை உடைத்து எறிவீர்கள். உங்கள் இலக்குகளை எட்ட மேலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பாணியையே கடைப்பிடித்து, அலுப்பை உருவாக்காதீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க இன்னும் உழைக்க வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பிரச்சனைகள் நீங்கும். துன்பங்கள் அகலும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். ஆனால், உங்கள் மனதில் தோன்றியதை பேசிவிட்டு, பின்பு வருத்தம் தெரிவிக்கிறேன் என சொல்லாதீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கடினமான நாள் இன்று. உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். முடிவு எடுப்பதில் தெளிவும், உறுதியும் வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் கேட்டவை நிறைவேறும் நாள் இது. விரும்பியவை கிடைக்குமா என்பது சந்தேகமே. கேட்டதற்கும், விரும்பியதற்கும் வித்தியாசம் உண்டு. பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அது பயனுள்ளதாகவே இருக்கும். சிமெண்ட் போட்டு உங்கள் வாயை மூடிக் கொண்டால் நல்லது. பேச்சைக் சற்று குறையுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களது தவறான முடிவுகள் சில மோசமான விளைவுகளை உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும். செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment