Advertisment

Rasi Palan 11th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 11th: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan May 11th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 11th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 11th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 11th May 2020: இன்றைய ராசி பலன், மே 11, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எதிர்பாராத திருப்பங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிதிவிவகாரங்கள் திருப்தியளிக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இலட்சத்தியத்தை நோக்கி நடைபோடுவீர்கள். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டபடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பழைய அனுபவங்களிலிருந்து புதிய பாடம் கற்பீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். முக்கிய விவகாரங்களில் தலைமையேற்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முக்கிய விவகாரங்களில் அமைதி காத்தால் முன்னேற்றமான பலன்களை காண முடியும். பிரியமானவர்களின் அன்பால், கடினமானதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

முயற்சிகள் பலிதமாகும். தேவையற்ற விசயங்களை மனதில் இருந்து அகற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். முக்கிய விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நேர்மறை எண்ணத்துடன் வாரத்தை துவக்குவீர்கள். ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்கள். யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியமாட்டீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிதி, பணிவிவகாரங்களில் அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புதன், வெள்ளி கிரகங்களின் உதவியால், மற்றவர்கள் செய்ய தயங்குவதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நிதானத்தை கடைப்பிடித்து வெற்றியை தனதாக்கிக்கொள்வீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பிரியமானவர்களிடையே பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களிடம் அந்தரங்க விசயங்களை பகிராமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் உங்கள் கருத்துகளை பரிகாசம் செய்வர்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அதிகம் உணர்ச்சிவசப்படும் வாய்ப்பு இருப்பதால், அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சி உங்கள் வசமே. மதியத்திற்கு பிறகு பொருளாதார பிரச்னைகள் ஏற்படும். மாலைநேரத்தில் நிம்மதி பெறுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இரகசியங்களை பாதுகாக்க முற்படுவீர்கள். சந்தேக கண்ணோடயே அனைத்து விசயங்களையும் அணுகுவீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். மன அமைதிக்கு தியானம் மேற்கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment