Rasi Palan 12th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 12th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 12th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 12 th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 12, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பது அவசியம். ஓய்வில்லாமல் உழைப்பதால் மனசோர்வுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நிதிவிவகாரங்களில் குழப்பம் நீடிக்கும். விரயத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதால்போட்டி பந்தயங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்ததை நிறைவேற்ற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். நேர்மைத்தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே உயர்வடைய முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வீர்கள். வாகனப்போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கிரகங்களின் பார்வை சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட விஷயங்களில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதிவிவகாரங்களில் மெத்தனப்போக்கு தவிர்ப்பது நல்லது. அவசர கதியில் அல்லோல்படவேண்டிய நிலை ஏற்படலாம் கவனம். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சுற்றுலா உள்ளிட்ட பொழுதுபோக்கு விஷயங்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனடித்தேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எதிலும் சமரசம் செய்துகொள்ளமாட்டீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வரும் காலம் வசந்தகாலம் என்பதில் நம்பிக்கை கொள்வீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் அவசியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். பண விரயத்தை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். ரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள். மற்றவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் துயர் துடைக்க உதவுவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தடைகளை தகர்த்தெறிய கடின உழைப்பு அவசியம் என்பதை உணர்வீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக இப்போதைக்கே திட்டமிடுவீர்கள்.தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். இலக்கை அடைய எத்தகைய பிரயத்தனத்தையும் செய்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களுக்குள்ளே இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வீர்கள். நல்லது நடைபெற பொறுமை காப்பது அவசியம் என்பதை உணர்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வரவுகளால் ஆனந்தம் அடைவீர்கள். நிதி விவகாரம் திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close