Advertisment

Rasi Palan 12th January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 12th January 2019: சூழ்நிலையைக் கையாள அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 12th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 12th January 2019 : இன்றைய ராசி பலன், 12 ஜனவரி 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், நீங்களே உங்களை போற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு உங்களிடம் உண்மையும், கனிவும் இருக்கும். நீங்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கலாம், ஆனால் அவர்களது நலன்களுக்கு எதிராக செயல்படுவதற்கு அவற்றை கையாள வேண்டாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நல்ல கம்யூனிகேஷன் இருந்தால், இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாகும். புதிய வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அம்சங்களை அறிய அடிக்கடி கட்டாயப்படுத்தப்படுவீர்கள். வெற்றிகரமான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. வீட்டிற்குள்ளேயே இருந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடின உழைப்பும், குழப்பமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். சந்திரன் உங்களது மனவலுவை அதிகரிக்கும். சந்திரன் ஆதிக்கம் தருவதால், நீங்கள் தவறாக ஏதும் செய்துவிடாமல் அது பாதுகாக்கும். ஆனால் உண்மைகளை விட நீங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்படலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளியிடங்கள் மற்றும் விருந்துகளுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று பணிகளை திறமையுடன் கையாளும் பொறுமை உங்களிடம் காணப்படாது. இதனால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. சூழ்நிலையைக் கையாள அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள். பிரார்த்தனை சிறந்த பலன் தரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களிடம் காணப்படும் ஈகோ மனப்பான்மை உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ளி இருமல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் நேர்மையான செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் இன்று உறுதி காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணிகள் இறுக்கமாக காணப்படும். பணிச் சூழலைக் கையாள்வதை கடினமாகவும் சவாலாகவும் உணர்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம்.
Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment