Rasi Palan 12th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 12, 2018: குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும்

Rasi Palan Today 12th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.

Rasi Palan 12th November 2018 : இன்றைய ராசி பலன், 12 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்பத்தில் குழப்பம் நிலவும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல், மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் முடியாமல் தடுமாறுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எளிதில் யாரையும் இன்று நம்ப வேண்டாம். உங்கள் சுய முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நண்பர்களை கூட சற்று தள்ளியே வையுங்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்காற்றில் முடிந்த அளவு பயணிக்க வேண்டாம். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் நம்பிக்கை சிதையாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களால் முடியும் என நீங்கள் நம்பினால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் சாதகமாகவே உள்ளன. கடவுள் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இதற்கு முன் ஏற்பட்ட மனவலி மீண்டும் உங்களை காயப்படுத்தும். அது இரத்தம் இல்லை… மருதாணி சிவப்பு எண்ணிக் கொள்ளுங்கள். காயங்களில் இருந்து நீங்களாகவே சிறிது விடுபடலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மகிழ்ச்சியான நாள். இல்லறம் இனிக்கும். மேலதிகாரிகளின் பரிவு கிடைக்கும். தொற்று சம்பந்தமான உபாதைகள் நீங்கும். செலவினம் குறையும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்ப நண்பர்களுக்கு தித்திப்பான நாள். மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறமையாக செயலாற்ற அனுசரணையான அணுகுமுறை தேவை. நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட கால ரகசியங்கள் வெளிப்படும். குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும். சுமாரான நாளாக இருக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

காது தொடர்பான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் கால் பூமியில் படும்படி நடந்து கொண்டால் நல்லது. கோவிலுக்கு சென்றால், பூசாரியின் கால்களில் விழுந்து வணங்குங்கள், அது உங்கள் பூர்வ கர்மாவை கழிக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Horoscope news in Tamil.

×Close
×Close