Rasi Palan 14th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 14th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 14th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 14, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பாதியில் தடைபட்டு நின்றுபோன காரியங்களை கிரகசாரங்களின் உதவியால், விரைந்து முடிப்பீர்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வாகனப்போக்குவரத்தில் கவனம் தேவை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பின்விளைவுகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் மிக முக்கியமானது என்பதால், திட்டமிட்டு செய்யும் காரியங்களில் மட்டும் வெற்றி கிட்டும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சென்சிட்டிவ் ஆன நாள் என்பதால், செயல்களில் அதிக கவனம் அவசியம். சிறிய தடுமாற்றமும் போக்கை மாற்றும் என்பதால் நிதானம் அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்கசமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்று, புதிய செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிலும் கவனப்போக்கு அவசியம். உணவுபழக்கவழக்கங்களில் அதிக கவனம் வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீண்டகாலமாக மனதை வாட்டிவந்த பிரச்னைகளிலிருந்து இன்று விடுதலை பெறுவீர்கள். பணியிடங்களில் நேர்த்தியுடன் செயல்பட்டால் மட்டுமே இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணியிடங்களில் அதிகாரிகளின் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும். வாகனப்போக்குவரத்தில் நிதானம் அவசியம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மகிழ்ச்சியான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும்.மற்றவர்கள் தரும் உத்திகளை பகுத்தாய்ந்து சீரிய முறையில் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உடல் உபாதைகளால் அவதி வாய்ப்பு இருப்பதால், உணவுநடைமுறையில் மாற்றம் மேற்கொள்வீர்கள். உடற்பயிற்சி செய்வீர்கள், வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தொழில் விவகாரங்களில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இருந்தபோதிலும் சுயமுயற்சியே, உண்மையான வெற்றி தரும் என்பதை எப்போதும் மறந்துவிட இயலாது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உறவுகளை புதுப்பிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணிநிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். வீடுகளில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

விட்டுக்கொடுத்து செல்வதினால் மட்டுமே, அடுத்தடுத்து காரியங்களை திறம்பட நிறைவேற்ற முடியும். குடும்ப உறுப்பினர்களின் விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கும் உங்களை, நண்பர்கள் / உறவினர்கள் நல்வழிப்படுத்துவார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம்

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close