Advertisment

Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 13th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 13th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 13th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 13, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களின் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பாதியில் விடுபட்ட காரியங்களை விரைந்து நிறைவேற்றுவீர்கள். காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ரகசியங்களை பாதுகாப்பீர்கள். தகவல்களை பொக்கிஷமாக பாவிப்பீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக அதிகநேரம் செலவழிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மகிழ்ச்சியான நாள். மாற்றுக்கருத்து உள்ளவர்களிடமிருந்து விலகி செல்வீர்கள். உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை குறிப்பறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்களின் தவறுக்காக மற்றவர்களை குற்றம் சாட்டுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சமூக விவகாரங்களில் அதிக அக்கறை கொள்வீர்கள். உங்களின் தொழில்முறை பங்குதாரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அந்தரங்க விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். தியானம் செய்வதனால் மனஅமைதி கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மனவலிமையுடன் இருப்பீர்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனதிற்கு இதமான காலநிலை நிலவும். மகிழ்ச்சியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மறைமுக செலவுகள் ஏற்படும் என்பதால் நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பணிச்சுமை அதிகரிப்பால் சோர்வாக உணர்வீர்கள். செய்த செயல்களை மீண்டும் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்களில் இறங்குவது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அனுபவ அறிவால் மற்றவர்களால் முடியாதவைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கசப்பான நினைவுகளை அவ்வப்போது மறத்தல் நலம். தியானம் மனஅமைதிக்கு வழிவகுக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மனக்குழப்பங்களால் அவதிப்படுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். பணவரவு திருப்தியாக இருக்கும். அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், திட்டமிடுதல் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்பார்ப்புகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். செயல்களில் அதிக ஈடுபாடு அவசியம். தக்க சமயத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் உதவும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால், எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையால், எண்ணிய காரியங்கள் தடையின்றி ஈடேறும். நிதி விவகாரங்களில் அதிக விழிப்புணர்வு அவசியம்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment