Advertisment

Rasi Palan 14th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 14th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 14th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 14th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 14th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 14, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீண்ட நாளுக்கு தனிமை உங்களுக்கு இனிக்காது. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் முக்கியத்துவத்தை விரைவில் உணருவீர்கள். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நீங்களாக தேடிச் செல்லும் இன்னல் நீங்கலாக வேறு எதுவும் உங்களை பாதிக்க காத்திருக்கவில்லை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடமை தவறாமல் பணிபுரியும் உங்கள் நேர்மைக்கு வெகுமதி நிச்சயம். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தள்ளிப் போகலாம். கடல் கடந்து போவதற்கான நேரம் இன்னும் உங்களுக்கு கிட்டவில்லை. சோர்வுகளை தூக்கி வைத்து டார்கெட்டை நோக்கி முன்னேறுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் பொழுதுபோக்குகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, வேலையில் நாட்டம் செலுத்துங்கள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும் நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்று வெற்றி உங்களை ஆராதிக்க காத்திருக்கிறது. நிச்சயம் ஒரு பெரிய சஸ்பென்ஸ் உங்களுக்கு வெயிட்டிங். மகிழ்ச்சியில் டியூன் கூட கம்போஸ் செய்வீர்கள். பெரிதாய் சாதித்த உணர்வுடன் இருப்பீர்கள். சந்தோஷமான நாள் இன்று

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எச்சரிக்கை மணி அடிக்கும் போதே உஷாரவது தான் உத்தமம். உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் அறியுங்கள். கவனமாக சூழ்நிலைகளை கையாளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களை சுற்றி உலவும் பாசிட்டிவ் விஷயங்கள், உங்களை பிரகாசமாக வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு அழகாக தெரியும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறிய விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சிக்கல்களை நண்பர்களுடனோ, துணையுடனோ பகிர்ந்து கவலையை விட்டு விலகுங்கள். உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றிகரமான நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். உங்களின் திடமான மனநிலை சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வாழ்க்கையில் அழகான திரைக்கதையில் பயணிப்பீர்கள். நல்ல நபர்கள், நல்ல நண்பர்களை சந்திப்பீர்கள். ஆகையால், பாஸிட்டிவ் வைப் உங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். வெற்றி இன்று உங்களுக்கே.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தவறாமல் உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்களை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சவாலான களம், நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை தேடி வரும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment