Advertisment

Rasi Palan 14th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 14th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan May 14th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 14th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 14th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 14th May 2020: இன்றைய ராசி பலன், மே 14, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

செய்வனவற்றை திருந்த செய்வீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் செயல்கள் தடையின்றி முடிவடையும். மனிதநேயத்துடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சிலநாட்களாக மனதை உறுத்திவந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிக்கலான பிரச்னைகளுக்கு எளியமுறையில் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நேர்மறை எண்ணங்களே உங்களின் பிளஸ் ஆகும். மற்றவர்களுக்காக வாக்குறுதிகளை ஏற்காதீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவைப்படும் நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மனதில் திடம் அதிகரிக்கும். ஆனால் அதற்காக அனைவரையும் எதிர்ப்பது என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். எதிர்கால தேவைகளுக்காக இப்போதே முன்னேற்பாடுகளை மேற்கொள்வீர்கள். மறதியால் அவதிப்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படுவர். உங்களது தேவைகளை நீங்களாகவே நிறைவேற்றிக்கொள்வீர்கள். இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ள பெரும்போராட வேண்டியிருக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

ரொமான்ஸ் எண்ணம் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். முக்கிய விசயங்களில் தலைமையேற்பீர்கள். மற்றவர்களை புறம் சொல்லுதல் தவிர்த்தல் நலம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உன்னத செயல்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வரும் வாரங்களில் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். நடக்கும் செயல்கள் நல்லவைக்கே என்பதை உணர்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மகிழ்ச்சியான நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணியிடங்களில் மதிப்பு உயரும். பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதி விவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவுவதால் மனம் குழம்புவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரமப்படுவீர்கள். இதிலிருந்து விடுபட நினைப்பீர்கள். கருத்து வேறுபாடு என்பதால் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பழக்கம் குறிப்பிட்ட அளவு கொண்டதாய் மாற்றியமைப்பீர்கள். நண்பர்கள் வட்டத்தை சுருக்குவீர்கள். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்தகால நினைவுகளை அசைபோடுவீர்கள். மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதனால் இழப்புகளை தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment