Advertisment

Rasi Palan 15th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 15th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 15th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 15th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 15th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 15, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சில சங்கடங்களை இன்று கடந்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை தக்க சமயத்தில் உங்களுக்கு உதவலாம். ஆனால், யாரையும் முழுவதும் சார்ந்து இருக்காதீர்கள். அதுவே உங்களுக்கு ஏமாற்றமாக முடியலாம். நான் இதை செய்ய முடியுமா? என்று யோசித்தால் உங்கள் தோல்வியை யாராலும் மாற்ற முடியாது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ஒவ்வொரு செயலையும், அதற்கேற்ற நேரத்தில் செய்திட பழகிக் கொள்ளுங்கள். உங்களின் தோல்விக்கு அதுவே காரணம். மாற்றம் இல்லாத நிமிடங்களை நீங்கள் அனுபவிக்க முடியாது. இயற்கை நியதியை உங்களால் மாற்றவும் முடியாது. சுமாரான நாள் இன்று.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

யாரும் உங்களை நிர்வகிக்க அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். நண்பர்களின் ஆலோசனைகள் சில சமயம் கைக் கொடுக்கும். தேவையில்லாத விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நேற்றைய நாளின் நீட்சியாக இன்றைய நாள் அமையும். வெற்றி உங்களை அலங்கரிக்கும். கான்ஃபிடன்ட்டாக செயல்படுவீர்கள். அதுவே உங்களின் பாதி பலம். நிதி நிலைமை முற்றிலும் மாறும். நல்ல வருமானம் கொழிக்கும் பணியில் சேருவீர்கள். குடும்பத்தில் சில சலசலப்புகள் இருந்தாலும், இறுதியில் உங்கள் வாய்ஸ் வெற்றிப் பெறும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மறதியால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த மந்த நிலை சற்று மாறும். பிரச்சனைகளை கண்டு ஒதுங்க வேண்டும். முயன்றால், உங்களை நோக்கி வர வெற்றி காத்திருக்கிறது. ஆனால், முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தோடு இனிமையான நேரத்தை செலவு செய்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் ஆரோக்யத்தில் அக்கறையின்றி இருப்பீர்கள். குறிப்பாக பெண்கள். கனிவான பேச்சுக்கள் உங்களுக்கு நண்பர்களை அதிகரிக்கும். உங்களை சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். வசீகரமான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். பணி நிமித்தமாகவோ, படிக்கவோ செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். மரம் தொடர்பான தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அடிப்படையில் சில பிரச்சனைகள் இருப்பதால், உங்களால் சில வெற்றிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். களைப்படைய வேண்டாம். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பணியிடத்தில் வரும் சங்கடங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிச் செல்லுங்கள். உங்கள் மன நிம்மதிக்கு அதுதான் நல்லது. பிடிபடாத செயல்களை செய்து தோல்வியை தேடிச் செல்லாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கணினி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பணியிடங்களில் சில அசௌகரியமான நிகழ்வுகள் ஏற்படலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

ராஜா-ராணி விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு ஓய்வு கிடைக்கும். நன்றாகமனதையும், உடலையும் புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்தடுத்து உழைப்புகளை கொட்ட வேண்டிய தருணங்கள் காத்திருக்கிறது. முன்னேற்றம் சீராக இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கணிசமான நண்பர்களை இன்று சம்பாதிப்பீர்கள். அதனால், சில நல்ல உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். தேவையில்லாத விவகாரங்கள் குறித்து விவாதித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நிம்மதியான நாள் இன்று.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment