Advertisment

Rasi Palan 16th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 16th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 16th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 16th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 16th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 16th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 16, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எந்த விசயத்திலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்களின் சாதகமற்ற பார்வைகளால், குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். உங்களது கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் செயல்களால் மனக்கவலைகள் ஏற்படும். இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட முனைவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களின் ஆலோசனைக்கு உறவினர்களிடையே வரவேற்பு இருக்கும். உங்களால் பலர் பலனடைவர். மகிழ்ச்சியான நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நிதிநிலைமை நிம்மதியளிக்கும். சிறிய லாபம் என்றாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த பிணக்கு மறைந்து உறவு மலரும். உணர்ச்சிகரமான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

தொட்டது துலங்கும். சிறிய நடவடிக்கைகளும் அதிகபட்ச நன்மை தரும். வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வீர்கள். எதிரிகளே சிறந்த ஆசான்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

முன்னேற்றங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். மற்றவர்களின் அன்பும், ஆதரவும் தக்க சமயத்தில் கைகொடுக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிர்காலத்தை பற்றி சிந்திப்பீர்கள். பாதுகாப்பான வாழ்விற்கு சிந்தித்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களின் தலைமைப்பண்பு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க ஆலோசனை வழங்குவீர்கள். யதார்த்தத்தை உணர்வதோடு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் உணர்த்துவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

எதிர்பாராத திருப்பங்களும் நன்மையிலேயே முடியும். சுயதேவைகள் பூர்த்தியாகும். என்ன தேவை என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதிநிலைமை சீராக இல்லாததால் மனசஞ்சலம் அடைவீர்கள். மனக்குழப்பங்களால், தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவி இடையே உறவிலும் விரிசல் ஏற்படலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அந்தரங்க விசயங்களை பகிராமல் இருப்பது நல்லது. பகைவர்களையும் மன்னிப்பீர்கள். நற்சிந்தனையே நற்செயலாக அமையும் என்பதில் உறுதியுடன் இருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தனிநபர் தாக்குதல் மற்றும் கேலி கிண்டலுக்கு உள்ளாவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவர்.மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment