Today Rasi Palan, 16th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th May 2020: இன்றைய ராசி பலன், மே 16, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நிதி விவகாரங்களில் தாமதம் ஏற்படும். நீண்டகால முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறு ஒன்றாகவும் இருப்பதால், மனசஞ்சலம் அடைவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், நிதிவிவகாரங்களில் திருப்தியான நிலை தென்படும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்..
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
மகிழ்ச்சியான நாள். நீதி, நேர்மை செயல்களில் மிளிரும், போட்டி, பந்தயங்களில் சாதகமான நிலை நிலவும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களது திட்டங்கள் குறித்து மற்றவர்களுடன் விவாதிப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கணவன் – மனைவி இடையே பிணக்குகள் குறைந்து புரிதல் அதிகரிக்கும். புதிய உறவுகளினால் வீட்டினும் மகிழ்ச்சி அதிகரிக்கும். காலம் கனியும் வரை காத்திருப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நிதி விவகாரங்கள் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். மகிழ்ச்சியான தகவல் வரும்நாட்களில் மேலும் உற்சாகத்தை தரும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் அதிக கவனம் அவசியம். கிரகங்களின் பார்வையினால், உங்களது நடவடிக்கைகளில் மாற்றம் காண்பீர்கள். நீண்டகால நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
புதிய உத்வேகத்துடன் இன்றைய நாளை துவங்குவீர்கள். எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். கேள்வியிலேயே பதில் உள்ளது என்பதை உணர்வீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களின் தவறுகளுக்காக மற்றவர்களை பொறுப்பேற்க சொல்வீர்கள். பொதுநலமாகவே செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.