Advertisment

Rasi Palan 19th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 19th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 19th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 19th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 19, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எதிர்கால சிந்தனை மேலோங்கும். நிதிவிவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தக்க சமயத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளதால், மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். முக்கியமான நிகழ்வுகளை ஒத்திப்போடுவீர்கள் அல்லது மாற்றியமைப்பீர்கள். வழக்கமான நடைமுறைகளிலிருந்து வேறுபடுவீர்கள். மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களது தனித்துவ குணங்களால், மற்றவர்களை அதிகம் கவர்வீர்கள். மனதில் புதிய உத்வேகத்துடன் புதுப்புது எண்ணங்கள் தோன்றும். மகிழ்ச்சியான நாள்

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்தகால நினைவுகளை அசைபோடுவீர்கள். அனுபவமே சிறந்த ஆசான் என்பதை எக்காலத்திலும் மறக்கமாட்டீர்கள். சோம்பலை கைவிட்டு, எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். எண்ணிய காரியங்கள் நிறைவேற சிறிது பொறுமை காக்கவும். நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உற்சாகமான நாள். புதிய நட்புகளின் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்வீர்கள். கிரகங்களின் சாதகமற்ற பார்வையால் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். தியானம் செய்வது மனஅமைதிக்கு வழிவகுக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தபோதிலும், தன்னம்பிக்கையால் எந்த சந்தர்ப்பத்தையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். ஆயிரம் பொய்களை விட, ஒரு உண்மை உயிரை காக்கும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் நீங்கள். உண்மைத்தன்மையை அனைவரிடத்திலும் பின்பற்றுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் இளைய சகோதரர்களுடன் அதிகநேரம் செலவழிப்பீர்கள். இருந்தபோதிலும் நம்முடைய பிரச்னைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளமாட்டேங்குறேங்களே என்று வருத்தப்படுவீர்கள். இந்த விசயம், மற்றவர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புதிய அணுகுமுறைகளுடன் கூடிய செயல்பாடுகளால் புத்துணர்வு அடைவீர்கள். நிதி விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இழந்ததை நினைத்து கவலை அடைய மாட்டீர்கள். மனவலிமையால், எடுத்த செயல்களில் துணிகர முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். தன்னை உதாசீனப்படுத்தியவர் முன் வாழ்ந்து காட்ட துணிவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

குடும்பம், குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். பணியிடங்களில் அதிகம் கண்காணிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம். சக பணியாளர்களின் பேச்சு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் பேசாமல் ஒதுங்கியிருப்பது உத்தமம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள் என்பதால் நிதானம் காப்பது அவசியம். மனதை உறுத்திவந்த விவகாரங்களில் தீர்வு கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வதால் மனமகிழ்ச்சி ஏற்படும். அளவறிந்து பேசினால் ஆபத்தில்லை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment