Advertisment

Rasi Palan 19th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 19th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th May 2020 rasi palan today 191867 - Rasi Palan 19th May 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th May 2020 rasi palan today 191867 - Rasi Palan 19th May 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 19th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 19th May 2020: இன்றைய ராசி பலன், மே 19, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அமானுஷ்யங்கள் உங்களை தேடி வரும். உங்களை ஆச்சர்யப்படுத்தும். உங்கள் சின்ன சின்ன கனவுகள் நிறைவேறும். தெளிவான முடிவுகள் இருந்தும் சில தடுமாற்றங்கள் வேண்டி விரும்பி உங்களை ஏற்றுக் கொள்ளும். சரியான தருணத்திற்காக  காத்திருப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களின் சீரிய அணுகுமுறை மூலம் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் இந்த உற்சாகத்தினாலேயே சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். எனவே சற்று பொருமையுடன் விஷயங்களை கையாள்வது அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகும். இதனால் உங்கள் மனதை வாட்டி வதைக்காமல் இருந்தாலே நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு சில அறிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் செல்ல உதவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பணம் தேவை திடீரென அதிகரிக்கும். இது நல்லதும் கிடையாது கெட்டதும் கிடையாது. ஒரு அத்தியாவசிய தேவைக்கான செலவாக இது அமைய அதிக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சகபணியாளர்களுடனான உறவுமுறையில் சில குழப்பங்கள் காணப்படும். இன்று சிறிய விஷயங்களைப் பெரிதாகக் கொள்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் உங்கள் உயர் அதிகாரிக்கு அதெல்லாம் போதாது. ஆனால் இந்த உழைப்பு நாள் இறுதியில் உங்களுக்கு நன்மையையே விட்டுச் செல்லும். புதிய வேலை வாய்ப்புகளை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் முயற்சிகள் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்காது. இதனை சுமையாகக் கருதுவீர்கள். ஆனாலும், பிறருக்கு பலன்களை அளிக்காத நட்சத்திரங்கள் கூட இன்று உங்களுக்கு அருள் புரியும். எனவே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தேவையற்ற கவலைகள் காரணமாக இன்று உங்கள் திறன் குறையும். ஆனால் சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி பெற வாய்ப்புள்ளது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக இருக்கும். பணியிடத்தில் அதிகப் பணிச் சுமைக் காணப்படும். அதனால் உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் காணலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனாலேயே இந்த நாள் மிகவும் போரிங்காக இருப்பது போல உணருவீற்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்களை சிலர் கவருவார்கள். மனதில் ஆசைகள் வந்து போகும் நாள். அந்த நபரிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயற்சி செய்து வேண்டாம் என்று நீங்களே விலகுவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் மனக் கசப்புகள் வரும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் நாள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணம் விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment