Advertisment

Rasi Palan 1st April 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 1st April 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 1st April 2020

Rasi Palan 1st April 2020

Today Rasi Palan, 1st April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 1st April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 1, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மகிழ்ச்சியான நாள், நிதி விவகாரங்கள் திருப்தி தரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் எண்ணிய காரியங்கள் ஈடேறும்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அதிகம் மனசஞ்சலம் அடைய வாய்ப்பிருப்பதால் மன அமைதி தேடுவீர்கள். எதிர்பாராத நிகழ்வுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கவும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நடந்ததை நினைத்து கவலைப்படுவதால் யாதொரு பயனுமில்லை என்பதை உணர்வீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். பணியிடங்களில் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். பேசுவதற்கு முன் சிந்தித்து பேசுவது நல்லது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீண்டநாள் நண்பரை சந்திப்பீர்கள். கற்பனைகள் நிறைந்தது வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வீடுகளில் முக்கிய மாற்றங்களை செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணியிடங்களில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். உங்களை தவறாக புரிந்துகொண்டவர்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்வர்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மாற்றங்கள் ஏற்பட காத்திருப்பது அவசியம். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீண்டகால இழுபறிக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களை தவறாக புரிந்துகொண்டு விலகியவர்கள் திரும்பி வருவர். உங்களுக்கு சாதகமான நிகழ்வுகள் நடந்தேறும். உங்கள் நன்னடத்தைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். வெளிவட்டார தொடர்புகளில் அதிக கவனம் அவசியம். கனவுகள் நனவாக கடின உழைப்பு அவசியம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment