Rasi Palan 1st January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 1st January 2019, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 1st January 2019 in Tamil : இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் இயற்கையின் சக்திக்கு உட்பட்டதே.  அதில் மனித இனமே அதிகளவில் ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வானிலை சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் என்று அவன் கண்டுபிடித்த ஆச்சர்யங்கள் பல. நமது தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம், உங்களுடைய தின பலனை தெரிந்து கொள்ளலாம். இன்று உங்களுக்கான ராசிபலன் இதோ,

Rasi Palan 1st January 2019 : இன்றைய ராசி பலன் ஜனவரி 1, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 

உங்கள் யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நபர்களை முடிந்தளவு அவாய்ட் பண்ணுங்கள். பணியிடத்தில் உங்கள் ராஜ்ஜியம் தான். நல்ல தகுதியான இடத்தை பிடிக்க, உங்களுக்கு இன்று அறிய வாய்ப்புகள் காத்திருக்கிறது. தவறவிட்டு விடாதீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று உங்கள் பணியில் உள்ள கடினத்தை உணருவீர்கள். ஆனால் அந்த கடினங்களும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக கடந்து செல்லும். உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களுடன் அன்பை வெளிப்படுத்துங்கள். சில விஷயங்களை தவிர்க்க முடியாது என்றாலும், அடுத்தக்கட்ட வேலையில் இறங்குவதற்கு முன்பு பொறுமையுடன் காத்திருந்தால் நன்மை உண்டாகும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சந்திரன் நம்பிக்கைக்குரிய இடத்தில் இருப்பதால், நடக்கும் எல்லா மாற்றங்களும் உங்களுக்கு சிறப்பாக அமைய அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம், நீங்கள் நினைக்கும் எல்லாமே கைக்கூடும் என்று உறுதியாக கூற முடியாது. அதனால் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று யோசனை செய்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டு இது. பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். குடும்ப வாழ்க்கையில் சில இன்னல்கள் இருந்தாலும், அவற்றினை சமாளித்து வெளியே வருவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் கைக்கூடும். உங்கள் திறமைகள் மற்றும் முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிப் பெறும். நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள். மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்து கொள்ளும் நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுடைய உறவுகளை ஆதரித்து, ஊக்குவித்து நடப்பது நன்மையை உண்டாக்கும். அவர்கள் எதைச் செய்தாலும் குறுக்கே நிற்பதை தவிர்த்து, அவர்கள் வழியில் சென்றால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதையும் எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள் இது. தோல்வி ஏற்பட்டாலும், அதனை கவனமாக கையாள வேண்டிய இக்கட்டான தருணத்தில் உள்ளீர்கள். வெளிப்படையான பேச்சைக் குறைத்துக் கொண்டாலே உங்களின் பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கூட்டு முயற்சி உங்களுக்கு பலன், பலம் இரண்டையும் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதற்காக முயற்சியை கைவிட வேண்டாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுங்கள். சிக்கல்கள் அகலும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

செய்யாத குற்றத்திற்கு கூட பொறுப்பேற்கும் நிலைமை உண்டாகும். யாருடைய கடனுக்காகவும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாதீர்கள். உங்கள் பணிகளில் மட்டும் நாட்டம் செலுத்துங்கள். வீண் விவாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நண்பர்கள் மூலம் பயனடைவீர்கள். கடவுள் வழிபாடு உங்களை மேம்படைய வைக்கும். கடிவாளம் இல்லாமல் சென்ற பயணம், முற்றுப்பெற்று சரியான திசையை நோக்கி பயணிக்க வைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வணிகத்தில் உண்டாகும் போட்டியில், எதிர்ப்பு போட்டியாளரின் நிலைக் கூட உங்களுக்கு சாதகமாக முடியும். ஆனால் இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். ஒரே ஒரு நபரை உங்களுடன் பிஸினசில் சேர்த்துக்கொள்ள நினைத்தாலும், அந்த நபரை பற்றி நன்கு தெரிந்து விசாரித்து முடிவெடுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள கடுமையான முயற்சிகள் எடுக்க புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வீர்கள். உங்கள் திறமையே உங்களை மேலோங்க வைக்கும். யாருக்காகவும் எதற்கும் கட்டுப்பட மாட்டீர்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Horoscope News by following us on Twitter and Facebook

×Close
×Close