Advertisment

Rasi Palan 21st July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 21st, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 21st, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 21st July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21st July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 21, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

செவ்வாய் கிரகத்தின் சாதகமான பார்வையால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நீண்டகாலமாக இழுபறியில் இருந்த விவகாரங்களில் தீர்வு கிடைக்கும். இவ்வளவு திறமைகள் தமக்குள் ஒளிந்துகிடந்தனவா என்று ஆச்சர்யப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வீர்கள்.எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சென்சிடிவ்வான நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடைய அன்யோன்யம் அதிகரிக்கும். அமைதியாக இருப்பதன் சுகத்தை அனுபவிப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களை வழிநடத்துவீர்கள். புதிய விசயங்களில் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மன அழுத்தம் அதிகரிக்கும். எந்த செயலிலும் சிறிது நன்மை உண்டு என்பதை உணர்வீர்கள். மன்னிப்பதால் உறவு நீடிக்கும். பணியிடங்களில் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மற்றவர்கள் உங்கள் செயலை பாராட்டுவர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். உரிமைகளை கேட்டுப்பெறுவீர்கள். மற்றவர்கள் உங்களை தவறாக வழிநடத்த முயல்வர் கவனம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உணவு விசயங்களில் மாற்றம் மேற்கொள்வீர்கள். உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயல்வீர். புதிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரம் திருப்தி தரும். புதிய விசயங்களில் அந்நியர்களை நம்பாமல் இருப்பது நல்லது. விருந்து, விசேசங்களில் பங்கேற்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வீட்டில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். புதியவரை வரவேற்க தயார் ஆவீர்கள். பலனறிந்து உறவுகளை மாற்றியமைப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சில விசயங்களில் எல்லைமீறி செல்வதாக உணர்வீர்கள். சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாய்ப்புகளை ஏற்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்கள் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பர். கடந்த கால நிகழ்வுகளிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். செய்நன்றி மறக்கமாட்டீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment