Today Rasi Palan, 21st May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 21st May 2020: இன்றைய ராசி பலன், மே 21, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நெகட்டிவ் கருத்துகளோடு உங்களை அணுகுபவர்களை அப்படியே தூர வையுங்கள். ஏன் ,எதற்காக, எப்படி என்று கேட்டால் தான் உங்கள் லட்சியத்தை முடியும். பின்புலம் இல்லாமல் வெற்றிப்பெற முயற்சி செய்வீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உடல்நிலையில் கூடுதல் அக்கறை தேவை. வாயு தொடர்பான தொல்லைகளால் அவதிப்படுவீர்கள். நிதானமான சில முடிவுகள் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கேட்பதற்கு நேரம் இல்லை என்று ஓடிக் கொண்டிருந்தால், யார் சொல்வதைத் தான் பிறகு கேட்பீர்கள்? தெளிவான சிந்தனை இருந்தால் மட்டுமே வெறுமையை வெற்றியாக்க முடியும். பெரியோர்களின் ஆலோசனைகளை நிராகரிப்பது உங்களுக்கு ஆபத்து.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சூழலுக்கு ஏற்ப வினையாற்றுவீர்கள். சறுக்கல்களை சமாளிப்பீர்கள். குடும்ப நிலவரங்களை கேட்டறிந்து செயல்படுவீர்கள். விரைவில் வீட்டில் சுபயோக நிகழ்வு அரங்கேறும். சவால்களை பழக கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களை சூற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. தேடல்கள் இருந்து கொண்டே இருக்கும். பின்வாங்க வேண்டாம். அரசியலில் ஈடுபடும் எண்ணம் வரும். தீர ஆராய்ந்து முடிவெடுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பேச்சில் வித்தகரே.... இன்றைய நாளும் உங்கள் சொற்களுக்கு மதிப்பளித்து வேலைகள் அரங்கேறும். கணவனின் அன்பைப் பெறுவீர்கள். தடுமாறும் சூழல்களை தட்டிவிடுவீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மற்றவர்கள் முன்பு உங்கள் வெற்றியை நிலை நாட்டுவீர்கள். எதிரி யார் என்பதை விட, செய்ய வேண்டிய செயல் என்ன என்பதில் கவனமாக இருப்பீர்கள். சமூகம் சார்ந்தோ, அல்லது ரொமாண்டிக்காகவோ, இன்று உங்களுடைய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சமீப காலங்களில் உங்களுக்கு இறக்கங்கள் இருந்தாலும், இன்று முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறத் துவங்கும். பாஸிட்டிவான மன நிலையில் இருப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சில முக்கிய பலன்களுக்காக வேறு சில நல்ல நேரங்களை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளில் நீங்கள் கன்வின்ஸ் ஆகாத வரை, அதை வெளிப்படுத்தாதீர்கள். திட்டங்களை நேர்மையாக வகுத்துக் கொள்ளுங்கள்,
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களுக்கு பிடிக்காத எந்தவொரு விஷயங்களையும் நீங்கள் செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினாலும் அதற்கு நீங்கள் உடன்பட மாட்டீர்கள். இருப்பினும், சில தருணங்களில் மற்றவர்கள் ஆலோசனை மற்றவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொள்வது நன்று.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் இலக்குகளை நீங்களே மேலும் முன்னோக்கி மாற்றி அமைப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை பணியிடத்தில் கொண்டு வராதீர்கள். உங்களுக்காக உதவி செய்ய, உங்களைச் சுற்றி மற்ற நண்பர்களும் இருப்பார்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பொழுது, அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.