Rasi Palan 22nd April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd April Rasi Palan in Tamil: தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி

Today Rasi Palan, 22nd April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 22nd April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 22, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களுக்கு இது முன்னேற்றமான காலம். ஆனால், சில இடங்களில் தடுமாற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இதில், உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். நிம்மதியான நாள் இன்று.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களை விட கடுமையாக உழைப்பீர்கள். ஆனால், அதற்கான நற்பெயர் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். வியாபாரத்தில் சறுக்கல் இருக்கும். மகிழ்ச்சியான நாளாக இல்லையென்றாலும், அதிக தொல்லை இருக்காது. திருமண பேச்சுகள் அடிபட ஆரம்பிக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் முடிவே இறுதியானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் பல நாட்கள் கழித்து மீண்டும் அமைதி திரும்பும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தவறுகளை உணருவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் அன்பு அதிகமாகும். வெளிநாடு செல்லும் யோகம் கைக்கூடி வருகிறது. நீங்கள் திருமணத்தை தள்ளிப் போட்டாலும் இனி அது உங்களை விடாது. ஏற்றம் பெறும் நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீண்ட காலமாக கண்ட கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறான். அதனால், வெற்றிகள் உங்கள் வசம் வந்து குவியும். நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள். குடும்பமே ஆச்சர்யப்படும். திறமையான உங்கள் ஆளுமை இனி கோட்டை கட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எது வெற்றிப் பெறும் என்று நீங்கள் கணித்து வைத்திருந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போலவே அரங்கேறும். பணியிடத்தில் இந்த கணிப்பு உங்களை வேறு தளத்திற்கு கொண்டுச் செல்லும். மாற்றங்களை அதிகம் எதிர்கொள்ளப் போகும் நாள் இது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சமீப கால டென்ஷனான வேலைக்கு இடையே நிம்மதியை தேடுவீர்கள். வெளியூர் செல்ல முடிவெடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆரம்பக்கட்டத்தில் உள்ள உங்களது சில பணிகள் முழுமையடைவதில் சில சிக்கல்கள் வந்து சேரும். அதை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பெற்றோர் நிம்மதி அடையும் அளவிற்கு உங்கள் செயல்பாடு இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த இனக்கம குறையும். ஆதரவு பெருகும். சில சச்சரவுகளை விட்டு நீங்களாகவே வெளியே வருவது நல்லது. பணியிடத்தில் புகழ் கிடைக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சில தோல்விகளும், அவமானங்களும் முன்னேற்றத்தின் அடுத்தப் பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது. குளிர்ச்சியான எந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றம் காணும் நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது முயற்சி வெற்றிப் பெறவில்லையே என்ற கவலைப்பட வேண்டாம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை அவ்வளவு தான். தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதனை சரிக் கட்டும் விதமாக அடுத்தடுத்த நாட்கள் ஏற்றமாக அமையும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிம்மதி தேடி அலையும் உங்களுக்கு, விரைவில் மகிழ்ச்சியான செய்தி கிட்டும். காதல் கைக்கூடும். திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வெற்றி கிட்டும்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close