Advertisment

Rasi Palan 22nd July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 22nd, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 22nd, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 22nd July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 22nd July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 22, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

முக்கிய விவகாரங்களில் முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய விஷயங்களில் ஈடுபடுவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போடுவதற்கு ஒப்பாகும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பயணத்திற்கு உகந்த நாள். நட்பு வட்டம் விரிவடையும். நேர்காணல், புதிய விவகாரங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். பிரியமானவருடன் பொழுதை கழிப்பீர்கள், விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கட்டுப்பாட்டுடன் இருந்து காரியங்களை சாதிப்பீர்கள். விருப்பு வெறுப்புகளை களைவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பகல்கனவு காண்பீர்கள். அந்நியர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். பணியிடங்களில் வெறுப்புணர்வு ஏற்படும் என்பதால் கவனம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வெளிவட்டார தொடர்புகளால் பலனடைவீர்கள். நீண்டகால திட்டங்களுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். செயல்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கணவன் - மனைவி இடையே பிணக்கு ஏற்படும். கெட்ட எண்ணங்களை மனதில் இருந்து அகற்றுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உரிமைகளை மீட்க சட்டரீதியில் போராடுவீர்கள். பொறுப்புகளை ஏற்க தயங்கமாட்டீர்கள். தராதரம் அறிந்து பழகுவீர்கள். எது செய்ய வேண்டும் என்பதை உணர்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சாகசம் நிறைந்த நாள். வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள். முக்கிய விவகாரங்களில் சோம்பலை தவிர்ப்பது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கிய விவகாரங்களில் சமரசம் செய்ய முற்படுவீர்கள். பணியிடங்களில் சக பணியாளர்களிடையே மனக்கசப்பு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வீடுகளில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். வரும் காலம் வசந்தகாலம் என்பதை உணருவீர்கள். மக்கள் வருவர் போவர் யார் பாதுகாப்பானவர்கள் என்பதை உணருவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களை தரம் உயர்த்திக்கொள்வீர்கள். நிதி, தொழில், வர்த்தக விவகாரங்களில் ஏற்றம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் வழிகளில் ஈடுபடுவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment