Rasi Palan 22nd September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 22nd september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

By: September 22, 2020, 7:02:15 AM

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 22nd September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 22, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி புத்தகத்தில், நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திரனில் இருந்து சுமார் 4 செ.மீ தூர விலகிச் செல்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், அந்த நாள் சில நிமிடம் நீடிக்கிறது என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அதனால், சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் இருந்து சந்திரனைப் பார்த்தால் அது ஒரு சிறிய புள்ளியாக தெரியும். அப்போது, ஒரு நாள் 30 மணி நேரமாக இருக்கும் என்று அந்த ஆராய்ச்சிப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் ராசியில் மீண்டும் பணம் மிக முக்கியமான காரணியாக இருக்கும். நீங்கள் விரக்தியில் உச்சகட்டத்தை அடைய சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை மற்றவர்களின் திறமையற்றவர்களாக இருக்கலாம். இருப்பினும், அடிப்படையான ஒரு கேள்வி நீங்கள் தனிப்பட்ட முறையில் குறைத்து மதிப்பிடப்பட்டதற்காக எரிச்சலாக இருக்கலாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்றைய சந்திரனின் நிலை உங்கள் மனநிலையில் கூர்மையான மாற்றங்களைக் குறிக்கின்றன. உங்களிடம் உள்ள ஆரம்பகால நிச்சயமற்ற தன்மை, வளர்ந்து வரும் நம்பிக்கையால் மாற்றப்படலாம். அது நிச்சயமாக ஒரு நல்ல செய்தியாக இருக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் ஏன் மிகவும் ரகசியமாக இருக்கிறீர்கள்? உங்களுடைய யதார்த்தமான பதில் மட்டுமே ஒரு நல்ல காரணமாக இருக்கும். நீங்கள் சொல்வதைக் கேட்க மற்றவர்கள் தயாராக இல்லை என்று இருக்கலாம். உங்களுக்கு நியாயமான கேள்விகளுக்கு அவர்கள் பதில்தர போதுமான உணர்திறன் இல்லாமல் இருக்கலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சமூக அழுத்தங்கள் சக்திவாய்ந்தவை. மேலும், அவை கவனத்தை சிதறடிக்கும் என்பதை நிரூபிக்கக்கூடும். ஆனால், உங்கள் கிரகநிலையில் உள்ள அடிப்படை பிரச்சினை உங்கள் நீண்டகால நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றியதாக உள்ளது. எதிர்காலத்திற்காக உங்களை அமைத்துக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த தருணம் ஆகும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)

எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது. இப்போது இது போட்டியிட வேண்டிய தருணம். தொழில்முறை மேலதிகாரிகளை இலக்காகக் கொண்ட எந்த முயற்சியையும் விடக்கூடாது. அதாவது பல சக ஊழியர்களிடம் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும், பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்போது அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறுவதற்கு துணிய வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் வாழ்க்கை நீண்ட காலத்திற்கு, அதிக கல்வி, சட்ட கேள்விகள், தார்மீக பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவற்றால் அடங்கியிருக்கும். கொள்கை விஷயங்களில் ஒரு கண் வைத்திருப்பது முக்கியம். மேலும், எப்போதும் நெறிமுறை உயர்ந்த அறத்தில் பிடிப்பு வைத்திருக்க வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் சொந்த யோசனைகள் நல்லதாக உள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. கூட்டு நிதிகளில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் மற்றவர்களின் பணத்தை செலவிடுகிறீர்கள் என்றால் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில், சாத்தியமான மிகவும் எச்சரிக்கையான பாதையைப் பின்பற்றி, சில நாட்களுக்கு எல்லாவற்றையும் நிறுத்தி வைப்பது விவேகமானதாக இருக்கலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பாருங்கள், கேளுங்கள் மற்றும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதே உங்களுடைய சிறந்த கிரக ஆலோசனையாகும். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அவசர எதிர்வினைகளை விட, முதிர்ச்சியானதாக கருதப்படும் சக்திவாய்ந்த பதில்களே உங்களுடைய அடையாளம். அதற்கு சந்திரன் சவால் விடுகிறது. தவிர, நீங்கள் தனியாக செல்ல முயற்சித்தால், ஒரு கூட்டாளில் உங்கள் வழியில் நிற்கலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வேலையில் கவனமாக இறங்கவும். புதிய வேலையைத் தொடங்க இது பொருத்தமான தருணம். ஆனால், அதே காரணத்தால் நீங்கள் பழைய பொறுப்புகளையும் விட்டுவிடலாம். நிகழ்வுகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் பார்ப்பது முக்கியம். மேலும், நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருப்பது மற்றவர்களுக்கு இறுக்கமான இடத்தில் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் ஆசைகளுக்கு அடிபணியுமாறு கிரகங்கள் உங்களை வலியுறுத்துகின்றன. நீங்கள் அடிபணிகிறீர்களா இல்லையா என்பதையும் அவை என்ன என்பதையும், நிச்சயமாக, உங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து இருக்கும். நீங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்திலும் கவனத்தை செலுத்த வேண்டும். இளைய உறவுகளை கவனமாகக் கேட்டு, உங்கள் படைப்பு சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)

வீட்டில் மாற்றத்தை தவிர்க்க முடியாத அழுத்தம் இருப்பதாகத் தெரிகிறது. அந்த மாற்றம் பலனளிக்கிறதா இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. ஏனென்றால் நீங்கள் தற்போதைய முன்னேற்றங்களை எடுத்து அவற்றை இன்னும் தொலைவாக கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கலாம். ஆனால், அது தாமதமாக வரலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குறைந்தபட்சம் ஒரு பெரிய லட்சியத்தில் நீங்கள் ஒரு படி பின்னோக்கி செல்லப் போகிறீர்கள். துல்லியமான தாக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால், நீங்கள் முன்பு விட்டுவிட்ட ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விரைவில் கண்டுபிடிப்பீர்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 22nd september

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X