Rasi Palan 22th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 21th February 2020

Rasi Palan 22th February 2020
Rasi Palan 22th February 2020

Today Rasi Palan, 22th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 22th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 22, 2020

இன்றைய நாள்

புதன் கிரகத்தால், அன்பு மற்றும் உறவு வலுப்படும் நாள். எல்லா ராசிக்காரர்களுக்கும் நற்பலன்கள் கிடைக்கும் நாள்.

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளித்தாலும் மனந்தளராமல் இருப்பீர்கள். நேர விரயத்தை தவிர்ப்பீர்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களின் தராதரத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உங்களின் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பீர்கள். மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கிறதே என மனவருத்தம் அடைவீர்கள். நின்று நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது என்பதை உணர்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விரயம் அதிகம் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.உங்களின் தவறுகளிலிரு;ந்து பாடம் கற்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

செவ்வாய் கிரகத்தின் சாதகமான பார்வையால் நற்பலன்களை பெறுவீர்கள். எளிதில் உணர்ச்சிபட வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. மற்றவர்களின் கருத்திற்கு செவிசாய்ப்பது நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நீண்டகால முதலீடுகள் குறித்த சிந்தனை மேலோங்கும். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்ப்பீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

எதிர்கால வாழ்க்கைக்காக திட்டங்களை வகுப்பீர்கள். இளைய சகோதரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். மனதிற்கு பட்டதை தயங்காமல் செய்வீர்கள், சொல்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வியாழன் மற்றும் சனி கிரகத்தின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நிதி, தொழில் விவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். பணபரிவர்த்தனைகளில் அதிக கவனம் அவசியம். பால்யகால நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் கவனம் தேவை.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 22th february 2020

Next Story
Rasi Palan 21th February 2020: இன்றைய ராசிபலன்Rasi Palan 21th February 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com