Advertisment

Rasi Palan 23rd August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 23rd August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 23rd August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 23rd August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 23rd August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 23, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

இக்கட்டான சூழ்நிலைகளையும் நீங்கள் கடந்து செல்ல பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்தடுத்து வரப் போகிற தடைகளை எளிதாக உடைத்தெறிவீர்கள். உங்கள் நேர்மையும், தொழில் பக்தியும் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் அளவோடு பயன்படுத்தும் பட்சத்தில் பிரச்சனைகளை எளிதாக தவிர்க்கலாம். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கசப்பான நாட்களை மறப்பதே சாலச் சிறந்தது. உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் உங்களை விட்டு எங்கும் ஓடிவிடாது. எனவே பொறுமையுடன் உங்கள் பணிகளை அணுகுங்கள். நேரம் நன்றாக இருக்கிறது. பதட்டம் வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களுக்கான ஆளுமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. அலுவலகங்களில் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்திலும் வழக்கத்துக்கு மாறாக, உங்கள் மீதான பார்வை மாறும். மதிப்பு உயரும். ஏளனமாக பேசியவர்களும், உங்களை அன்னாந்து பார்ப்பார்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதி நிலைமையில் சிக்கல் இருந்தாலும், தலைப்புச் செய்தியாக மாறாது. இருப்பினும், எந்த செயலிலும் கவனமாக இருத்தல் வேண்டியது மிக அவசியம். ஒரு பொருள் வாங்கினால் கூட, அதற்கான ரசீதையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நாளை அதன் மூலமாக கூட உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.

 

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம். உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் காணப்படும். உங்களின் திறமை காரணமாக அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்று நினைப்பதால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இன்று பணியிடத்தில் அதிக வளர்ச்சி காண முடியாது.முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தியானம் அல்லது யோகா செய்து பதட்டமான சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். கவனக்குறைவு காரணமாக இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் தவிர்த்தல் வேண்டும். உங்கள் துணையுடன் அகந்தை உணர்வு காரணமாக பிரச்சினை ஏற்படும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறிய பண வரவு கூட உங்களின் நம்பிக்கைக்கு பெரிய அளவு ஊக்கமளிக்கும். மிகவும் நுண்ணுணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அதிகம் முயல்வீர்கள். உங்களுக்கான சூழ்நிலை சரியாக அமையாது போது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மற்ற நாட்களை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பீர்கள். உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும். எதையும் அமோதிக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கடந்த வருடங்களில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் எல்லாம் இன்ற வருடம் சரியாகிவிடும். மற்ற கோள்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரிவதால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றியடையும். இவ்வளவு செய்து வந்த வேலையில் இருந்து சிறிது இடைவேளை இன்று எடுத்துக் கொள்ளலாம். கலை திறன் உள்ளவர்கள் இன்று திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment