Advertisment

Rasi Palan 24th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 24th March 2020 today rasi palan

Rasi Palan 24th March 2020 today rasi palan

Today Rasi Palan, 24th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 24th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 24, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் குறிக்கோள் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் இழப்புகளை சந்திக்கலாம். அதை தோல்வி என்றும் சொல்லலாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சுலபமாக உங்கள் கணக்குகளை தீர்க்க முடியாத காலக்கட்டம் இது. நீங்கள் ஒரு திட்டம் போட்டால், அது வேறொன்றில் வந்து முடியும். கண் சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

முயற்சியை கைவிடாதீர்கள். காலம் உங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுச் செல்லாது. அதை நம்பலாம். ஆனால், சில சில இடைஞ்சல்கள் உங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

ஆதரவை உங்கள் பக்கம் திருப்பும் வித்தையை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். விரைவில் அதில் வித்தகர் ஆகிவிடுவீர். புயல் அடித்தாலும் அசராமல் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். வெற்றி ஒன்றே உங்களது குறிக்கோள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்ப உறவில் மகிழ்ச்சி தொடரும். உங்களின் சேமிப்பில் இருந்து செலவு செய்ய நேரிடும். சில காரணங்களால் அவ்வாறு நிகழலாம். காவல்துறையில் இருப்பவர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணுவீர்கள். ஆனால், அதில் சில மொக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருங்க. ஆனால், பெற்றோருக்கு ஏற்ற நல்ல பிள்ளை என பெயர் வாங்குவீர்கள். நிம்மதியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் நாள் கிடையாது இது. ஆனால், வெகு விரைவில் அந்த நாள் உங்களை வந்து சேரும், காத்திருங்கள். நீங்கள் கொண்டாடுவதற்கென நாட்கள் அணிவகுத்து நிற்கின்றன.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பல நாட்களாக வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்திருந்த பொருள் வாங்கும் அளவிற்கு பணம் வந்து சேரும். இதனால், நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணக்கில்லாத அளவிற்கு நிம்மதி அடைவீர்கள். நண்பர்களிடம் புளங்காகிதம் அடைவீர்கள். மன நிறைவான நாள் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தட்றோம்… தூக்குறோம் என்றில்லாமல் சில நிதான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் குணாதிசயத்தைப் பார்த்து, உங்களிடம் நெருக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முடிவு இருந்தாலும், ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் பால்ய கால நண்பரை சந்திப்பீர்கள். மனம் நிம்மதியாக உணர்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை இனிமேலாவது ஆராயுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கதை எழுதுவதில் ஆர்வம் கொள்வீர்கள். பிரிந்து சென்ற உறவுகளிடம் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் எப்போதும் போல சுமூகமான சூழலே நிலவும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் மனம் குளிரும்படி எந்த தகவலும் கொஞ்ச நாளைக்கு வரப்போவதில்லை. ஆதலால் பொறுமை காப்பது மிக அவசியம். தேவையற்ற செய்திகளை நம்ப வேண்டாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment