Advertisment

Rasi Palan 24th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 24th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 24th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 24th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 24th May 2019 : இன்றைய ராசி பலன், மே 24, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பல நாட்களுக்கு முன்பு உங்களைவிட்டு போன ஒன்று, இப்போது மீண்டும் உங்களை வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சாதகமான விடை கிடைக்கும். மாணவர்களின் கல்வித் தரத்தில் திடீர் முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பிடிக்காத விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்து உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். திருமணம் கைக்கூடும். சில உடல் பிணிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பணி நிமித்தம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். அப்படியில்லை என்றாலும், பயண திசை இருப்பதால் வேறு வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். கடவுள் வழிபாடு உங்களைச் சுற்றும் சில அசௌகரிய தருணங்களை துரத்தும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மேலோட்டமான உங்களது சிந்தனை சில இடங்களில் ஆபத்தாக அமையலாம். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறுவீர்கள். ஊதியத்தை விட பணியின் சுமை அதிகமாக இருந்தாலும், அதை நினைத்து வருந்த வேண்டாம். உங்களது படிப்பினை இன்னும் 2-3 வருடங்களில் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சிரமம் பார்க்காமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை செய்து முடித்தால் அதுவே பெரிய விஷயம். கிரக அமைப்புகளால் சில சங்கடமான நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். தோல்விகள் உங்களைத் தேடி வரும். விநாயகரை வணங்குங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கோபத்தை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தரத்தை குறைக்கவிருக்கும் ஆயுதம் தான். பொறுமையின் சிகரமாய் இருந்தால், இந்த நாளை தொல்லையின்றி கடக்கலாம். கடினமான நாள் இது. எங்கிருந்து அம்பு வரும் என்றே தெரியாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சரமாரியாக இன்னல்களை சந்திப்பீர்கள். சற்று கடினமான காலக்கட்டம் இது. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என எண்ண வேண்டாம். இப்போது உங்களுக்கு நடக்கிறது, அவ்வளவுதான். தாமதமான சில கோரிக்கைகள் உங்களின் வளர்ச்சியை மேலும் மட்டுப்படுத்தும். உஷார்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பணவரவு உங்களை குளிர்விக்கும். பழைய கடன்களை ஒழித்து முடிப்பீர்கள். இதனால், குடும்பத்தில் நிம்மதி நிலவும். மனைவியின் அன்பைப் பெறுவீர்கள். கடந்த கடினமான நாட்களை இனி நினைத்து மட்டும் பார்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இது உண்மையில் உங்களுக்கு திருப்திகரமான நாள். நீங்க விரும்பியது கிடைக்கும். விரும்பாதது தேடி வரும். குடும்பத்தினர் மத்தியில் உங்கள் மீதான மதிப்பு உயரும். கடன் பாதியளவு குறையும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரவாரம் இல்லாவிட்டாலும் நிம்மதியடையும் அளவுக்கு பணவரவு இருக்கும். சுமாரான நாள்

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தொடர்ந்து உங்களுக்கு ஏமாற்றங்கள் பரிசு தர காத்திருக்கின்றன. இன்னும் சில நாட்களுக்கு உங்களின் பார்வை கீழ் நோக்கி தான். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு விளக்கு போடுங்கள். சில தொல்லைகளை ஒழிக்க முடியும். சுமாரான நாள் இது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எப்போதும் போல் அல்லாமல், உற்சாகமாக காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் அனுபவித்து வரும் முதுகு வலி குறையும். பணியிடத்தில் புதுப் புது விஷயங்களை உட்புகுத்தி வெற்றிப் பெற முயற்சி செய்வீர்கள். சிறப்பான நாள் இது.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment