Advertisment

Rasi Palan 26th April: இன்றைய ராசிபலன்! உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்

Rasi Palan Today, 26th April Rasi Palan in Tamil: மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 26th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th April: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 26th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 26th April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 26, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் கௌரவம் உயரும். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேடி வந்து உதவி செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் பார்வை உங்கள் மீது விழும். தேர்வுகளுக்கு படிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. மாணவர்களை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்பங்களுடன் அதிகம் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிட்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மவுனம் இன்று உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அனாவசிய வேலைகளில் கவனத்தை திசைத் திருப்ப வேண்டாம். அதேசமயம், மௌனம் எல்லா நேரத்திலும் உங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தராது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல், திருமணம் தித்திப்பாக இருக்கும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும். நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். கிரகங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால், மருத்துவர்களிடம் போக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை. சுமாரான நாள் இன்று. பணியிடத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது. வெறுமனே தோன்றும் மனதை அலைபாய விடாதீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தொழில் செய்வோருக்கு முன்னேற்றம் ஏற்படும். இன்று பல சஸ்பென்ஸ்கள் உங்களை மகிழ்விக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லற வாழ்வு இனிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போதும் போதும் என்று நீங்கள் சொல்லும் அளவிற்கு இன்று நல்ல விஷயங்கள் நடைபெறும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனம் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே விலகும். மறைமுக தாக்குதல்கள் இனி இருக்காது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பண வரவு திருப்திகரமாக இருக்கும். இதனால், கடன் சற்று குறையும். மனம் நிறையும். அதேசமயம், செலவு செய்வதில் கவனம் இருப்பது அவசியம். பொழுபோக்கில் ஆர்வம் செலுத்துவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிட்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தில் சலசலப்பு நீங்கும். கணவன்-மனைவி உறவில் உரசல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. காதலில் பிரிவுகள் உண்டாகலாம். பணியிடத்தில் நீங்கள் விரும்பாவிட்டாலும் வெற்றி வந்தே தீரும். உங்கள் கடின உழைப்பே அதற்கு காரணம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மன அழுத்தம் குறையும். தெளிவாக சிந்திக்க தொடங்குவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கான நாளாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சிறப்பான நாள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பிரதிபலன் உண்டு. அதனை அனுபவிக்கும் பாக்கியம் இன்று உங்களுக்கு உள்ளது. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் நாட்டம் செலுத்துவீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment