Advertisment

Rasi Palan 27th April 2020: இன்றைய ராசிபலன்

today rasi palan, rasi palan April 27th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
today rasi palan, rasi palan April 27th, இன்றைய ராசிபலன்

today rasi palan, rasi palan April 27th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 27th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 27th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 27, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வாரத்தின் துவக்கத்திலேயே தடுமாற்றம் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் அந்தரங்க விஷயங்களை பகிராமல் இருப்பது நலம். லட்சியத்தை அடைவதற்கான வழிவகைகளில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இந்த நேரத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். முக்கிய நபர்களுக்காக உங்களது அன்றாட நடவடிக்கைகளை மாற்றியமைப்பீர்கள். தொழில் விவகாரங்களில் எதிர்பார்த்த திருப்பம் காண்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எல்லாரையும் எல்லா நேரத்திலும் திருப்திபடுத்த முடியாது என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். மற்றவர்கள் உங்களின் உதவிக்காக ஏங்குவார்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வரும் காலம் வசந்த காலம் என்பதனடிப்படையிலான நடவடிக்கைகளை துவக்குவீர்கள். கிரகங்கள் உங்களை கத்திமுனையில் நிற்பது போன்ற நிலை ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதி விவகாரங்களில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதிக கவனம் வேண்டும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மறதி ஏற்படும் என்பதால் குறிப்பு எடுத்துக்கொள்வது உத்தமம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்களுக்காக அதிகம் மெனக்கெடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக வாக்குறுதிகள் தராமல் இருப்பது நல்லது. உங்களின் நற்செயல்களை பிறர் பரிகாசிப்பர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்களின் பார்வை சாதகமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். வழக்கமான பணிகளை புதுவித முயற்சிகளால் முடிக்க நினைப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

குடும்ப உறுப்பினர்கள் அனுசரணையாக இருப்பர். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். நீண்ட நாளைய விவகாரங்களுக்கு தீர்வு காண முயல்வீர்கள். சரியான பாதையில் வெற்றிநடை போடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

எதிலும் நியாயம், நேர்மை கடைபிடிப்பீர்கள். எல்லா விவகாரங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏமாற்றப்படும் நிலை இருப்பதால், எச்சரிக்கையாக இருப்பது நலம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வாழ்வின் முக்கியமான விசயங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். எண்ணங்கள் மேம்படும். நிதிநிலைமை சீராக இருப்பதால், கடன்களை அடைப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

செய்யும் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுக்கு உதவியாக இருப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய விசயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். நிதிநிலைமையில் அதிக கவனம் தேவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment