Advertisment

Rasi Palan 29th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 29th February 2020: தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 29th February 2020 rasi palan today

Rasi Palan 29th February 2020 rasi palan today

Today Rasi Palan, 29th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 29th February 2020 : இன்றைய ராசி பலன், பிப்ரவரி 29, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களை உயர்த்த உதவியவர்களை மறப்பது அவ்வளவு சரியான விஷயமாக இருக்காது தானே. தேவையான நேரத்தில் அவர்களுக்கு பதில் உதவி செய்துவது நலம் பயக்கும். அதீத ஆர்வத்தால் பணத்தை இழக்க நேரிடும். ஆகையால், நிதி கையாள்வதில் கவனம் தேவை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதனால், பாராட்டப்படுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல்நலத்தில் அக்கறை அவசியம். கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலை இருக்கும். சுயநலத்துடன் இருப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பால்யகால நண்பரை சந்திப்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தேவையற்ற விசயங்களில் தலையிடுவதனால் மனஅமைதி இழந்து காணப்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். மகிழ்ச்சியான நாள். மகிழ்ச்சியாக இருப்பதால், பிறரையும் மகிழ்விப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

புதியனவற்றை கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மாற்றுக்கருத்து உடையவர்களிடமிருந்து விலகி இருத்தல் நலம். பணவரவு விவகாரங்களில் அதிருப்தி நிலவும். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நன்மை நடைபெற நல்ல எண்ணங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்வீர்கள். உங்களது நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் காணப்படும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மனதில் நன்மை தோன்றினாலும், நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நண்பர்கள், உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

விழிப்புடன் இருந்து விரயங்களை தவிர்ப்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களினால் தொல்லை ஏற்படலாம். கசப்பான சம்பவங்களை மறப்பதால் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்று முடிவு எடுப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கண்டுகொள்ளாத போக்குடன் இருக்காதீர்கள். அது உங்களுக்கான சில வாய்ப்புகளை தட்டிப்பறித்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. இதை மேம்போக்கு என்றும் கூறலாம், வெற்றியும், தோல்வியும் என மாறி மாறி இன்றைய நாளை கடப்பீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment